ஷாக்கிங்! மீன் எண்ணெய் மாத்திரைகள் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறதாம்!

fish oil
cod liver oil
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பது மிகவும் ஒரு சாதாரணமான நிலையாகி விட்டது. நவீன வாழ்க்கை முறை , மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவை இதற்கு காரணமாக இருந்தாலும் , கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடுக்கும் சில நடவடிக்கைகளால் எந்த பயனும் இருப்பதில்லை. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தீவிரமான இதய நோய் அபாயத்தை உருவாக்குகிறது.

கெட்ட கொழுப்பினை குறைக்க மக்கள் தங்களது அதிக அறிவை வெளிப்படுத்தும் வகையில் சுயமாக ஒரு சில சப்பிளிமண்ட்களை எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த சுய மருத்துவத்தில் ஒன்றாக ஓமேகா கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ள மீன் எண்ணெய் (cod liver oil) மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இந்த மாத்திரைகள் கெட்ட கொழுப்பினை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இது பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் , நேரடியாக மருந்தகங்களில் வாங்கி உட்கொள்ள தொடங்குகின்றனர். இந்தியாவில் இந்த போக்கு நீண்ட காலமாகவே இருக்கிறது.

2026 இல் வெளியான புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள், கொழுப்பினைக் கட்டுப்படுத்துவதில் மீன் எண்ணெய் எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை பற்றிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் வாங்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகள் கொலஸ்ட்ராலை குறைப்பதில் உதவாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு சிலர் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஸ்டாடின் வகை மருந்துகள் பக்க விளைவுகள் கொண்டது என்று கூறி அதை தவிர்க்க எண்ணுகின்றனர். இந்த வகையில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அதிக பக்க விளைவுகள் இல்லாதது , மேலும் இயற்கையான முறையில் பெறப்படுகிறது போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இது பற்றி அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்க இருதயவியல் கல்லூரி  ஆகியவற்றின் நிபுணர்கள், மீன் எண்ணெயை மட்டும் ஒரு மருந்துப் பொருளாக கொலஸ்டிராலை கட்டுப்படுத்த பயன்படுத்துவது தவறான சிகிச்சை முறை என்று எச்சரித்துள்ளனர். இது போன்ற தவறான சிகிச்சை முறைகள் இதய நோயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன.

மீன் எண்ணெய் மாத்திரைகளை LDL அளவைக் குறைக்க பயனில்லாமல் இருப்பது ஏன்?

மீன் எண்ணெய் மாத்திரைகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்பட்டாலும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் போதுமான அளவு சக்தியை வெளிப்படுத்துவது இல்லை. மீன் எண்ணெய் டிரைக்கிளிசரைடு என்னும் கொலஸ்ட்ராலை குறைப்பதில் திறனற்றதாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைவிட ஒரு மோசமான தகவல் என்னவென்றால் , ஒரு சிலருக்கு இந்த வகை மாத்திரைகள் கெட்ட கொழுப்பான LDL அளவை அதிகரிப்பதில் பங்களிப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கெட்ட கொழுப்பை குறைக்கிறேன் என்று நினைத்து விட்டு கொழுப்பை அதிகரிக்கும் பணியைத்தான் ஒரு சிலர் செய்கின்றனர்.

LDL கொலஸ்ட்ராலை குறைக்க சரியான வழிமுறை என்ன?

LDL கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு முதலில் மருத்துவர் பரிந்துரைக்கும் டிரைக்கிளிசரைடுகளை கரைக்கக் கூடிய திறனுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இவை கொழுப்பினை கட்டுப்படுத்துவதில் நீண்ட காலமாக பயனுள்ளதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. மாத்திரைகள் சாப்பிடுவது மட்டுமல்லாமல் உணவு பழக்கவழக்கங்களிலும் மருத்துவரின் பரிந்துரையை கடைபிடிக்க வேண்டும்

உணவு பழக்க வழக்கங்களில் அதிக எண்ணெய் சேர்த்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் டின்னில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களையும், செயற்கை உப்பு சேர்க்கப்பட்ட பொருட்களையும் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். தினசரி நிறைய காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் குறைந்தது தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com