
உடற்பயிற்சி செய்வது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை தினமும் செய்வதற்கு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், உடற்பயிற்சி செய்த பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் மக்களுக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. உடற்பயிற்சிக்கு பிறகு நாம் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தண்ணீர் குடியுங்கள்:
உடற்பயிற்சி செய்து முடித்ததும் அதிகமாக நீரிழப்பு ஏற்படும். அப்போது நம் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அச்சமயம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டியது அவசியமாகும். அதிக வியர்வை வரும் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, உடற்பயிற்சி செய்து முடித்ததும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். அதுவே நம்மை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமில்லாமல் எழுமிச்சை ஜூஸ், நீராகாரம், மோர் போன்றவற்றை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
2. ஓய்வெடுங்கள்:
சிலருக்கு உடற்பயிற்சி செய்து முடித்ததும் தலை சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது நமது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்த நாளங்கள் அதிகமாக திறக்கின்றன. இது இயல்பு நிலைக்கு திரும்ப உடலுக்கு சிறிது நேரம் தேவைப்படும். எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் சற்று ஓய்வெடுப்பது நல்லதாகும்.
3. உணவில் கவனம்:
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் தேவை. உற்பயிற்சி செய்வது உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்காகவேயாகும். ஆனால், உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு அதிக கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது உடற்பயிற்சி செய்ததற்கான பலனை வீணாக்கிவிடும். எனவே, நாம் சாப்பிடும் உணவில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்து களைத்துவிட்டால், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
4. உடற்பயிற்சி ஆடைகள்:
உடற்பயிற்சியின் போது நமக்கு நன்றாக வியர்ப்பதன் காரணமாக நாம் அணிந்திருக்கும் ஆடைகள் ஈரமாகியிருக்கும். எனவே, ஈரமான ஆடைகளை உடனே மாற்றிவிட வேண்டியது அவசியம். குளிர்ச்சியாக இருக்கிறது என்று அந்த ஆடையை அணிந்துக்கொள்வது சருமத்தை உலர வைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும். எனவே, உடற்பயிற்சி செய்த பிறகு ஆடையை மாற்ற வேண்டியது அவசியமாகும்.
5. உடற்பயிற்சிக்கான நேரம்:
ஒரு நாளைக்கு உடற்பயிற்சி செய்ய நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒரு நாளைக்கு குறைந்த நேரம் உடற்யிற்சி செய்தாலும் நாளடைவில் அதை அதிகரிக்க இதுப்போன்ற குறிப்புகள் பயன்படும். இதற்கான பிரத்தியேக ஆப்களும் தற்போது உள்ளதால் அவற்றை பயன்படுத்துவது நல்லது. இந்த 5 விஷயங்களையும் உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.