வருஷக்கணக்கா பாத்ரூம்ல கஷ்டப்படுறீங்களா? ராத்திரி இதை குடிங்க... காலையில வயிறு 'ஃப்ரீ'யா இருக்கும்!

Constipation
Constipation
Published on

காலையில் எழுந்ததும் நம் அன்றாடக் கடமைகளை முடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் மலம் கழிப்பது. ஆனால், நிறைய பேருக்குக் காலை நேரம் என்றாலே ஒரு போர்க்களம் போலத்தான் இருக்கும். பாத்ரூமுக்குள் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பார்கள், ஆனால் வயிறு சுத்தமாகாது. 

"எனக்கு இந்த பிரச்சனை பல வருஷமா இருக்கு, இதுக்கெல்லாம் தீர்வே கிடையாது" என்று விரக்தியில் இருப்பவர்கள் பலர். மலச்சிக்கல் என்பது வெறும் உடல் உபாதை மட்டுமல்ல; வயிறு சுத்தமாக இல்லை என்றால், மனசும் சுத்தமாக இருக்காது. எரிச்சல், கோபம், மன அழுத்தம் எல்லாமே வரும். இதை இப்படியே விட்டால், அது மூல நோய் போன்ற பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். 

கவலையை விடுங்க, எப்பேர்ப்பட்ட நாள்பட்ட மலச்சிக்கலையும் சரி செய்யும் ஒரு அற்புதமான வழியைப் பற்றிப் பார்ப்போம்.

ஏன் இந்த பானம் அவசியம்?

நவீன மருத்துவத்தில் மலச்சிக்கலுக்கோ அல்லது அதனால் வரும் பைல்ஸ் பிரச்சனைக்கோ பெரும்பாலும் அறுவை சிகிச்சையைத்தான் தீர்வாகச் சொல்வார்கள். ஆனால், நம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், உடலில் உள்ள கழிவுகளை இயற்கையாகவே வெளியேற்ற எளிய வழிகள் உள்ளன. நாம் தயாரிக்கப் போகும் இந்த பானம், குடலில் இறுகிப் போயிருக்கும் மலத்தை இளகச் செய்து, எந்த வலியும் இல்லாமல் வெளியேற்ற உதவும்.

தேவையான பொருட்கள்:

  • நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சைலியம் ஹஸ்க் (Psyllium Husk) - 1 ஸ்பூன்.

  • கல் உப்பு - கால் ஸ்பூன்.

  • சுக்குப் பொடி - அரை ஸ்பூன்.

  • சுத்தமான நெய் - 1 ஸ்பூன்.

  • வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்.

இதையும் படியுங்கள்:
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் போதும்... எடை குறைந்து, முகம் பளபளக்கும்!
Constipation

செய்முறை:

செய்முறை ரொம்ப ரொம்ப ஈஸி. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கோங்க. அதில் மேலே சொன்ன சைலியம் ஹஸ்க், கல் உப்பு, சுக்குப் பொடி மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். நெய் தண்ணீரில் மிதக்கும், பரவாயில்லை.

இதை எப்போது குடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். காலை நேரத்தை விட, இரவு சாப்பிட்டு முடித்து, தூங்கப் போவதற்குச் சற்று முன்பு குடிப்பதுதான் மிகச் சிறந்தது. 

ஏன் தெரியுமா? இரவு முழுவதும் இந்த கலவை உங்கள் குடலில் வேலை செய்யும். மறுநாள் காலை நீங்கள் எழுந்திருக்கும்போது, உங்களை அறியாமலே மலம் மிகச் சுலபமாக வெளியேறும்.

இந்த பானத்தில் உள்ள 'சைலியம் ஹஸ்க்' அதிகப்படியான நார்ச்சத்தைக் கொண்டது. இது குடலில் உள்ள கழிவுகளைத் தள்ளிவிடும் வேலையைச் செய்யும். 'சுக்கு', வயிற்றில் இருக்கும் தேவையற்ற வாய்வு மற்றும் உப்பசத்தை நீக்கும். நாம் சேர்க்கும் 'நெய்', காய்ந்து போன குடலுக்கு ஒரு லூப்ரிகண்ட் போலச் செயல்பட்டு, மலம் வழுக்கிக்கொண்டு வர உதவும்.

இதையும் படியுங்கள்:
5 லட்சம் ரூபாயில் ஒரு ஐஸ்கிரீம்!
Constipation

இந்தப் பானத்தை ஒரே ஒரு நாள் குடித்துவிட்டு நிறுத்தக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு 10 நாட்களாவது தொடர்ந்து குடித்து வாருங்கள். பல வருடங்களாக இருந்த மலச்சிக்கல் பிரச்சனை மாயமாக மறைவதை நீங்களே உணர்வீர்கள். 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com