இன்று பெரும்பாலானோரை பாதிக்கும் ஒரு சுகாதார பிரச்சனையாக ரத்த அழுத்தம் உள்ளது. ஆனாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் ரத்த அழுத்தத்தை இயற்கையான வழிகளில் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
உடல் எடையை குறைக்க வேண்டும்:
உடல் எடையை குறைப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். உடல் எடை சற்று அதிகரித்தால் கூட ரத்த அழுத்தத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே உங்களது உடல் எடையில் வெறும் மூன்று அல்லது ஐந்து கிலோ எடையை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கலாம்.
உங்களுக்கு BP எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள... உடனே வாங்குங்கள்!
ஆரோக்கியமான உணவு முறை:
ஆரோக்கியமான உணவு முறை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்பதால், உணவில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்:
உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். தினமும் வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதை தொடர்ந்து வழக்கமாக்கி கொண்டால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
உப்பு உட்கொள்ளலைக் குறைத்தல்:
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நாம் சாப்பிடும் உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராமுக்கு குறைவாக உப்பு எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் 1,500 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது.
காபி அருந்துவதை குறைக்க வேண்டும்:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு காபி ஏற்றதல்ல. காபி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இதில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தில் தற்காலிக உயர்வை ஏற்படுத்தலாம் என்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி குடிப்பதை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.
தூக்கத்தின் அவசியம்:
தினந்தோறும் இரவு 7 மணி நேர தூக்கம் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. ஆகவே ஒவ்வொரு நாளும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூக்கத்தை உறுதிப்படுத்தி கொள்வதன் மூலம் ரத்த அழுத்த அளவை சரியாக நிர்வகிக்க முடியும்.
மேற்கூறிய எளிய இயற்கையான குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றாலும் மருத்துவர் உடன் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவதும் மிகவும் அவசியமாகும்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
உங்களுக்கு BP எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள... உடனே வாங்குங்கள்!