
மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை அனுபவிப்பவர் களுக்கும், பிற மனநலப் பிரச்னைகளுக்கும் சிகிச்சை கருவியாக சமையல் கலையை பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள். ஆச்சிரியமாக இருக்கிறது இல்லையா? வாருங்கள், தெரிந்து கொள்ளலாம் சமையல் செய்வதால் ஏற்படும் அற்புதத்தை...
உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஒரு உறுதியான வழக்கத்தைக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியமான அமைப்பு இல்லாமல், தொடர்ந்து முடிவெடுப்பதன் மூலமாக நாம் உந்துதலை இழக்கிறோம் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். ஒரு வழக்கத்தை உருவாக்கும்போது நம்மில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இந்த சில மாற்றங்கள் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது. சமையல் செய்வதாலும் மன ஆரோக்கியம் கிடைக்கும். சமையல் செய்வதும் ஆரோக்கியமான வழக்கத்தின் ஒரு பகுதியாகும்.
தொடர்ந்து சமைப்பதால் சுவையான பலன்களைத் பெறுவதோடு மட்டுமல்லாமல், அது நம்மை ஒழுங்குபடுத்துவதிலும் பங்களிக்கிறது. வீட்டில் சமைக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி கொள்ளும்போது வாடிக்கையாக வீட்டில் உள்ள பொருட்களை நினைவில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு சமையல் செய்யும் ஆற்றலை பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஆகவே மூளைக்குள் பதுங்கி இருக்கும் வேண்டாத எண்ணங்களும் மறைந்துவிடும்.
வீட்டில் சமையல் செய்வதால் உண்டாகும் நன்மைகளில் மிக முக்கியமான ஒன்று எதுவென்றால் அது குடும்பத்தை ஒன்றிணைக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து நாம் செய்த சமையலை சாப்பிடும்போது நமக்கு கிடைக்கும் அந்த சந்தோஷத்தை பகிர வார்த்தைகளே இல்லை.
மேலும் யாராவது ஒருவர் சமையல் பிரமாதம் என்று கூறிவிட்டால் போதும், நம் மனம் துள்ளி குதிக்கும். உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்காக சமையல் செய்ய தரமான நேரத்தை ஒதுக்கும்போது நீங்கள் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை பெறுவீர்கள். ஆகவே யாராவது உஙகளுக்கு வேண்டப்பட்ட ஒருவர் depression இல் இருந்தால், நீங்கள் அவரை எப்படியாவது அந்த mood off நேரத்தில் சமையல் செய்ய எடுத்துரைங்கள். சமையல் செய்ய செய்ய அவரின் mood divert ஆகி normal நிலைக்கு அவர் வந்து விடுவார்.
ஓவியம் வரைதல், நடனமாடுதல், பாடுதல் மற்றும எழுதுதல் போன்ற கலைகள் சிறந்த மன ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. படைப்பாற்றல் உங்கள் மனநிலையை உயர்த்தும், உங்களுக்கு அதிகாரமளிக்கும் உணர்வைத்தரும், மேலும் கவலையான எண்ணங்களிலிருந்து கவனத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் மனதை அமைதிப்படுத்த முடியும்.
இந்த மற்ற கலை நோக்கங்களைப் போலவே நீங்கள் சமைப்பதைப் பற்றி நினைக்காமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரியுமா? சமையல் கலையும் நம் கவனத்தை திசை திருப்பும். பிடித்த சமையல் குறிப்புகளைக் கண்டுபிடித்து சமைப்பதும் ஒரு படைப்புச் செயல்தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக சமைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக புதிய புதிய உணவை கண்டுபிடிக்க முயற்சி செய்வீர்கள். புதிய புதிய உணவு வகைகளை சமைக்க முயற்சிப்பதால் நீங்கள் சமையலின் ஆக்கப்பூர்வமான பலன்களை பெறலாம்.
மன ஆரோக்கியம் என்ற ஒன்று நம் உடல் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே நீங்கள் சொந்தமாக உணவை சமைப்பதன் மூலம், உங்கள் உணவின் தரத்தை நீங்கள் முழுமையாக பெறலாம். இது மனச்சோர்வைக் குறைக்கவும் பதட்டத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.
சிலர் சமைப்பதை ஒரு வேலையாக நினைக்கலாம். மறுபுறம், சிலர் சமைப்பதை ஒரு பலனளிக்கும் அனுபவமாகப் பார்க்கிறார்கள். வெட்டுவது மற்றும் கிளறுவது போன்ற சமையலின் இயற்பியல் செயல்முறைகள் உங்கள் கவனத்தை ஈரக்கின்றன. இது உங்கள் கவனத்தை கையில் உள்ள பணியில் முழுமையாக செலுத்த உங்களை அனுமதிக்கிறது. சமைப்பதால் ஏற்படும் சிறந்த நன்மைகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். இது உங்கள் மனதை லேசாக்கி அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விலக்கி வைக்கும்.
வீட்டில் சமைப்பதால் ஏற்படும் மனநல நன்மைகள் அனைத்தையும் இப்போது நாம் தெரிந்து கொண்டோம். ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள், சமையல் செய்வதால் உங்களுக்கும் நன்மை, சாப்பிடுபவர்களுக்கும் நன்மை.
ஆகவே, இனிமேலாவது, சந்தோஷமாக உற்சாகத்தோடு சமையலை செய்யுங்கள். வேலைக்கு செல்பவர்களும் வாரத்தின் விடுமுறை நாடகளில் சமையல் செய்யும் முறையை கடைபிடியுங்கள். நீங்கள் சமைப்பதால் முதலில் முழு நன்மையும் உங்களுக்குதான் கிடைக்கும். சாப்பிடுபவர்களுக்கு உடல் மட்டும்தான் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் சமைப்பவர்களுக்கோ உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.