கவரிங் நகை போடும்போது அரிப்பு மற்றும் தடிப்பு வருகிறதா? எளிமையான தீர்வுகள் இதோ!

கவரிங் நகைகளால் ஏற்படும் சரும அலர்ஜியைத் தடுத்து, சருமத்தைப் பாதுகாக்கும் பாதுகாப்பு வழிகாட்டிகள்!
Covering Jewellery | கவரிங் நகை
Covering Jewellery | கவரிங் நகை
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பொதுவாக சருமத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் அவற்றை மீண்டும் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும் உதவியாக இருக்கும். பொதுவாக காது, கழுத்து, மூக்கு, கை விரல்கள், கை மணிக்கட்டு போன்ற இடங்களில் அலர்ஜி ஏற்படுவதுண்டு.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் அணியும் கவரிங் நகைகள் தான். தரமான நகைகளாக இருந்தாலும் கூட முறையாக பராமரிக்க தவறும் பொழுது அவை கழுத்து, காது, கை விரல்கள் போன்ற பகுதிகளில் அரிப்பையும் தடிப்பையும் உண்டாக்கிவிடும். 

அலர்ஜியை ஏற்படுத்தும் உலோகங்கள்:

கவரிங் நகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நிக்கல் உலோகம் தான் 90% தோல் அலர்ஜிக்கு முக்கிய காரணமாகிறது. நகைகளுக்கு பளபளப்பைக் கூட்ட சேர்க்கப்படும் காரீயம் (Lead) & காட்மியம் (Cadmium) போன்ற நச்சு உலோகங்கள் சருமத்தை வெகுவாக பாதிக்கும். வியர்வையுடன் செம்பு (Copper) வினைபுரியும் போது சருமம் பச்சையாக மாறி அரிப்பை உண்டாக்கும்.

மலிவான கவரிங் ஆபரணங்களில் உள்ள நிக்கல் உலோகம், வியர்வையை ஈர்க்காமல் எரிச்சலைத் தரும் பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற சிந்தடிக் துணிகள், உடைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை வேதிச் சாயங்கள், இறுக்கமான உடைகளில் உள்ள எலாஸ்டிக் பகுதிகள் போன்றவை சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். அத்துடன் தோல் வறண்டு செதில் செதிலாக உரிய ஆரம்பிக்கும். தீவிரமான நிலையில் சிறு கொப்புளங்கள் மற்றும் நீர் வடிதல் போன்றவை உண்டாகும்.

கடிகாரங்கள் மற்றும் காலணிகளில் பயன்படுத்தப்படும் செயற்கை லெதர் பட்டைகள், வியர்வையை உறிஞ்சாமல் வேதிச் சாயங்களுடன் வெப்பத்தைத் தடுத்து ஒவ்வாமையை உருவாக்கும் பாலிஸ்டர் மற்றும் நைலான் துணிகள், அக்ரிலிக் மற்றும் ஸ்பான்டெக்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளில் உள்ள மீளும் தன்மைக் கவரிங் இழைகள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

தற்காப்பு ஆரோக்கிய குறிப்புகள்:

நெயில் பாலிஷ் ட்ரிக்:

கவரிங் நகைகளை அணியும் முன்பு அதன் பின்புறப் பகுதியில் டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷை பூசி  விடலாம். இது சருமத்திற்கும் உலோகத்திற்கும் இடையே ஒரு தடுப்பாக மாறும். இது சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தாது. சருமத்தை வறண்டு போகாமல் மாய்ஸ்சரைசரைத் தடவி விட அரிப்பு, எரிச்சல் போன்றவை இராது.

Covering Jewellery | கவரிங் நகை
Covering Jewellery | கவரிங் நகை

வியர்வை வராமல் பார்த்துக் கொள்ளலாம்:

உடற்பயிற்சி செய்யும் பொழுதும், வெயிலில் செல்லும் போதும் கவரிங் நகைகளைத் தவிர்ப்பது நல்லது. வியர்வை உலோகத்தை வேகமாக உருகச் செய்து அலர்ஜியை தீவிரமாக்கும். எனவே வியர்வை அதிகம் உள்ள நேரங்களில் கவரிங் நகைகள் மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.

பவுடர் தடவுதல்:

நகைகளை அணிவதற்கு முன்பு அந்த பகுதியில் சிறிதளவு டால்கம் பவுடரைத் தடவினால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு அலர்ஜி குறையும். 

இதையும் படியுங்கள்:
உஷார் மக்களே... கிராம்பு தண்ணிய குடிச்சா உங்க உயிருக்கே பெரிய ஆபத்து?
Covering Jewellery | கவரிங் நகை

ஹைபோஅலர்ஜெனிக் நகைகள்:

ஹைபோஅலர்ஜெனிக் (Hypoallergenic) அல்லது நிக்கல் ஃப்ரீ (Nickel free) என்று குறிப்பிடப்பட்ட நகைகளை வாங்கி அணியலாம். 

கவரிங் நகைகளை நீண்ட நேரம் அணிய வேண்டாம். விழாக்கள் முடிந்தவுடன் உடனடியாகக் கழற்றி விட அலர்ஜி ஏற்படுவது குறையும்.

செயற்கை இழைகளுக்குப் பதிலாக 100% தூய்மையான காட்டன் ஆடைகளை அணிவது சிறப்பு.

தங்க நகையாக இருந்தாலும் கூட சிலருக்கு அதில் இருக்கும் நுணுக்கமான வடிவமைப்பில் படிந்திருக்கும் அழுக்குகள் நாளடைவில் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்கி விடும். எனவே மாதத்திற்கு ஒரு முறை காது, கழுத்து, கைகளில் உள்ள நகைகளை அகற்றி சோப்பு நீரில் ஊற வைத்து சுத்தமான பிரஷ் கொண்டு கழுவித் துடைத்து பயன்படுத்தலாம்.

அலர்ஜி வந்தால் என்ன செய்யலாம்?

அலர்ஜி ஏற்பட்டவுடன் நகையைக் கழற்றி விட்டு அந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். அரிப்பைக் குறைப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது அலோவேரா (கற்றாழை) ஜெல் தடவலாம். பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டி-ஹிஸ்டமைன் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் பாரம்பரிய உணவுகள்: மருத்துவர் கூறும் ரகசியம்!
Covering Jewellery | கவரிங் நகை
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com