இளநீரில் உள்ள ஆபத்துக்கள்... ப்ளீஸ் தெரிஞ்சுக்கோங்க! 

tender coconut
Tender coconut
Published on

இளநீர் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், பல ஊட்டச்சத்துக்களின் வளமாகவும் உள்ளது. இது காலம் காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.‌ ஆனால், இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இளநீர் அனைவருக்கும் ஏற்றதல்ல என்பதுதான் உண்மை.‌ சிலருக்கு இது பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் இளநீரை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் யார் யார் இளநீரைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி விரிவாகக் காண்போம். 

  1. இளநீரில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உடலின் நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளுக்கு அவசியமான ஒரு தாது. ஆனால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இதய நோய்களுக்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் அதிக அளவு பொட்டாசியத்தை உட்கொள்வது ஆபத்தானது. இது ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரித்து இதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக மாற வழிவகுக்கும். 

  2. இளநீர் இயற்கை குளுக்கோசைக் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. ஆனால், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் அல்லது குறைந்த கலோரி உணவை உண்பவர்கள் இளநீரை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

  3. இளநீரில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் இளநீரை அதிகமாக உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நோயை மேலும் சிக்கலாக்கும். 

  4. சிலருக்கு தேங்காய்க்கு அலர்ஜி இருக்கலாம். இது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். 

  5. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் இருந்தாலும், தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு இழந்த திரவங்களை மீட்டெடுக்க போதுமானதாக இருக்காது. விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு ஸ்போர்ட்ஸ் பானங்களை உட்கொள்வது நல்லது. மேலும் சிலருக்கு இளநீர் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாயு போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள்… காரணங்களும், அறிகுறிகளும்!
tender coconut

யார் யார் இளநீரைத் தவிர்க்க வேண்டும்? 

  • சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள். 

  • இதய நோயாளிகள். 

  • நீரிழிவு நோயாளிகள். 

  • தேங்காய்க்கு அலர்ஜி உள்ளவர்கள்.

  • உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள். 

  • குறைந்த கலோரி உணவை உட்கொள்பவர்கள்.

இளநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதை அதிகமாக உட்கொள்வது உடலுக்குக் கேடு விளைவிக்கும். மேற்கூறிய பிரச்சினைகள் ஏதேனும் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று, இளநீரை உட்கொள்வது குறித்து முடிவு எடுப்பது நல்லது. இளநீரை மிதமாக உட்கொள்ளுவதன் மூலம் அதன் நன்மைகளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com