'அமைதிப் புறா'ன்னு நினைச்சீங்களா? அது உங்க நுரையீரலுக்கு வைக்கும் 'ஆப்பு' புறா!

pigeons
pigeons
Published on

நம்மில் பல பேர் காலையில எழுந்ததும் பால்கனியிலயோ, ஜன்னல் ஓரத்துலயோ புறாக்கள் வந்து உட்கார்ந்து சத்தம் போடுறதப் பார்த்திருப்போம். சில பேர் அதை அதிர்ஷ்டம்னு நினைப்பாங்க, இன்னும் சில பேர் அதுக்கு தானியம் வைப்பாங்க. 

பார்க்கிறதுக்கு அமைதியா, அழகா இருக்குற இந்த புறாக்கள், நம்ம வீட்டுக்குள்ள ஒரு அமைதியான ஆபத்தைக் கொண்டு வருதுன்னு சொன்னா நம்புவீங்களா? ஆமாம், மருத்துவ நிபுணர்கள் புறாக்களால நமக்கு சில எதிர்பாராத நோய்கள் வரலாம்னு எச்சரிக்கிறாங்க. 

பிரச்சனையின் ஆணிவேர் எது?

புறாக்கள் நம்ம வீட்டு பால்கனியில வந்து உட்கார்ந்துட்டுப் போறதுல தப்பில்லை. ஆனா, அது போட்டுட்டுப் போகுதே ஒரு எச்சம், அதுதான் இங்க வில்லன். அந்த புறா எச்சம் காஞ்சு போனதுக்கு அப்புறம், காத்துல கலந்து நம்ம சுவாசத்துக்குள்ள போகுது. இந்த எச்சத்தில அம்மோனியா வாயு அதிகமா இருக்குறதால, நாம அதை சுவாசிக்கும்போது, அது நம்ம உடலுக்குள்ள நச்சு வாயுவை அனுப்புன மாதிரி ஆகிடுது. 

இதனால, ஹைப்பர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ், ஆஸ்துமா, சிஓபிடி மாதிரி மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் வர அதிக வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க.

யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?

இந்த பாதிப்பு எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. குறிப்பா, வீட்ல இருக்குற சின்ன குழந்தைங்க, வயசானவங்க, கர்ப்பிணிப் பெண்கள், ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறவங்களுக்கு இது ரொம்பவே ஆபத்தானது. அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்குறதால, இந்த நச்சுக் காற்று அவங்களை எளிதா தாக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒரு புறா, ஒரு நிமிடம்: சர்வதேச அமைதி தினத்தின் வரலாறு!
pigeons

அதுமட்டுமில்லாம, புறா எச்சத்தில பலவிதமான பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் வளரும். இதுவும் காத்துல கலந்து நம்ம நுரையீரலை சேதப்படுத்த வாய்ப்பிருக்கு. ஆரம்பத்துல இது தெரியாது, ஆனா போகப்போக இது ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையா மாற வாய்ப்பிருக்கு.

ரசாயனம் இல்லாத இயற்கை வழி!

 புறா வராம இருக்க வலை கட்டுறது, ரசாயனம் தெளிக்கிறது எல்லாம் ஒரு வழிதான். ஆனா, அது நம்ம வீட்டு அழகைக் கெடுக்கும். இதுக்கு ஒரு எளிய, அழகான, இயற்கை வழி இருக்குன்னு சொல்றாரு ஒரு தோட்டக்கலை நிபுணர். அதுதான் டாஃபோடில் (Daffodil) செடி. இந்த பூச்செடியோட அறிவியல் பெயர் 'நார்சிசஸ் சூடோனார்சிசஸ்'. 

இந்த பூவோட கடுமையான வாசனை புறாக்களுக்கு சுத்தமா பிடிக்காதாம். அதனால, உங்க பால்கனியிலயோ இல்ல புறாக்கள் அதிகமா வர்ற இடத்துலயோ இந்த செடியை வெச்சீங்கன்னா, புறாக்கள் அந்தப் பக்கமே வராதாம்.

இதையும் படியுங்கள்:
பருத்தியெல்லாம் இனி ஓரம் போங்க! நம்ம மூங்கில் துணி மார்க்கெட்டுக்கு வந்துருச்சு!
pigeons

நம்ம வீட்டுக்கு வர்ற புறாக்களை நாம விரோதியா பார்க்கத் தேவையில்லை. ஆனா, அதனால வர்ற பிரச்சனைகள்ல இருந்து நம்மையும் நம்ம குடும்பத்தையும் பாதுகாத்துக்கிறது ரொம்ப முக்கியம். ஒரு சின்ன செடி மூலமா நம்ம வீட்டு அழகையும் கூட்டி, ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்னா, அதை உடனே செய்றதுதானே புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com