
உணவுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் நிலக்கடலையில் இருந்து எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தேங்காய் கொப்பரையில் இருந்து எடுக்கப்படுகிறது . எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆமணக்கில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. உணவுத் தேவையைத் தாண்டிய இலுப்பை எண்ணெய் இலுப்பை விதையிலிருந்து எடுக்கப்படுகிறது. புங்க எண்ணெய் புங்கன் விதையிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு எண்ணையுமே சரி அதன் விதைகளில் இருந்தே எடுக்கப்படுகிறது.
ஆனால் தொலைக்காட்சியில் இதயத்திற்கு நல்லது என்று விளம்பரம் செய்யப்படும் ரீபைண்ட் ஆயில் என்னும் எண்ணெய் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்பதை மக்கள் அனைவரும் யோசிக்க மறுக்கின்றனர். ரீஃபைண்ட் ஆயில் என்பது அரேபிய நாடுகளில் பூமிக்குள் கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து ஒயிட் பெட்ரோல், பெட்ரோல், டீசல், குருடாயில் என்னும் கசடாயில் எடுத்தது போக இறுதியாக தண்ணீரைப் போல் கிடைக்கும் ஒரு பெட்ரோலிய திரவமாகும்.
இதை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வரை கடலில் தான் கலந்து வந்தார்கள். ஆனால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பெட்ரோலிய மினரல் ஆயிலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து அதில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றன.
உயிரை மெல்ல கொல்லும் விஷத்தை, தொலைக்காட்சி சேனல்கள் மூலம் நடிகர் நடிகைகளை வைத்து, விளம்பரம் செய்து மக்களை முட்டாள்கள் ஆக்கி, நம்ப வைத்து இன்று ஒவ்வொரு வீட்டிலும் பெட்ரோலிய திரவத்தை பயன்படுத்த வைத்துவிட்டனர்.
மேலும் குழந்தைளுக்காக கடையில் வாங்கி வரும் அனைத்து சிற்றுண்டிகளும் இந்த தரமற்ற எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகிறது. ஏனென்றால் விலை குறைவு; இரண்டாவது இந்த எண்ணெயில் போட்டால் மூன்று மாதம் வரை சிற்றுண்டிகள் கெட்டுப்போகாது.
விளம்பரத்தில் வரும் இந்த எண்ணெய் வகைகளை பயன்படுத்தும் வீட்டில் மாரடைப்பு ஏற்படுவது உறுதி. ஆகவே மக்கள் சமையல் எண்ணெய் விஷயத்தில் மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
தினமும் சாராயம் குடிப்பவருக்கு எந்த அளவு உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுமோ, அந்த அளவுக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் பாதிக்கப்படும் என்பதை மருத்துவர்கள் பூடகமாக சொல்லியும் மக்கள் புரிந்து கொள்ள மறுப்பதும் தொடர்ந்து இந்த எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதும் காசு கொடுத்து நோய் வாங்குவதற்கு சமமாகும்.
நோய் தீர காசை செலவிடுங்கள். காசை கொடுத்து நோயை வாங்காதீர்கள். எண்ணெய் நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு பொருள் அது தரமானதாக இருக்கட்டும். முடிந்தவரை உணவு தேவைகளுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதே சாலச் சிறந்து.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)