
இந்த அவசர காலகட்டத்தில் நாம் அனைவரும் உணவை சரியான முறையில் சாப்பிடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வோம். ஆங்கிலேய கலாச்சாரம் சிலவற்றை பழக ஆரம்பித்தத்தில், இந்த நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.
உணவு தான் உடல் ஆரோக்கியத்தின் முதல்படி. அதில் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
நின்று கொண்டே சாப்பிடுவது முதலில் ஜீரண மண்டலத்தை பாதிக்கச் செய்யும். ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது வயிற்றில் இருக்கும் உணவு மெதுவாக வெளியேறும். அவர்கள் நின்று கொண்டு இருக்கும் போது இவை சரியாக நடக்காது.
நின்று கொண்டே சாப்பிடுவதால் உணவுகள் செரிமான மண்டலத்துக்குள் செல்லும் வேகம் அதிகமாகிறது. உணவு நுண் துகள்களாக உடைக்கப் படுவது தடுக்கப் படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமான கோளாறை ஏற்படுத்தும்.
நின்று கொண்டே சாப்பிடும் போது உணவு வேகமாக கீழே இறங்குவதால் போதுமான அளவு சாப்பிட்டு இருக்கிறோமா? என்பது தெரிவதில்லை. இதனால் அதிக உணவை எடுக்க நேரிடும். பசி நிறைந்த உணர்வே வராததால் சாப்பிடும் அளவு அதிகரிக்கும்.
உட்கார்ந்து சாப்பிடும்போது குறைந்த உணவே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். வயிற்றின் தசைகள் அழுத்தம் ஏற்படுவதால், ஓவர் ஈட்டிங் என்பதே இருக்காது. இந்த நிலையில் கலோரிகளும் கூடுதலாக எரிக்கப்படும்.
சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதற்கு முன் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பர். ஆனால், நின்று கொண்டே சாப்பிடும் போது உணவு சீக்கிரம் செரிமானம் ஆகிறது.
உணவில் இருக்கும் நுண் துகள்கள் உறிஞ்சப் பட்டு ஊட்டச்சத்தாக மாறுவதற்குல் அவை குடலை அடைந்து விடுகிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே பசியெடுக்க ஆரம்பிக்கும்.
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. அது செரிமானப் பிரச்சினை மட்டுமன்றி பல வயிற்று கோளாறுகளையும் உண்டாக்கி விடும். இந்த சத்துக்கள் வாயுவாகி உடலில் தேங்கி விடுகிறது. இது குடல் வீக்கத்தை உண்டாக்கி விடும். குறிப்பாக கார்போஹைட்ரேட்கள் முழுமையாக செரிமானம் ஆகாமல் வீக்கத்தை உண்டாக்கும்.
இவ்வாறு பல உடல்நலக் குறைபாட்டை தரும் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டு உட்கார்ந்து நன்கு சாப்பிட பழகிக் கொள்ள உடல், குடல் இயக்கம் மேம்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)