உங்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபமும் எரிச்சலும் வருகிறதா? இதுதான் காரணம்!

Do you feel angry and irritable about anything? This is the reason
Do you feel angry and irritable about anything? This is the reasonhttps://www.tamilspark.com
Published on

காரணமே இல்லாமல் சிலர் எதற்கெடுத்தாலும் கோபமும் எரிச்சலும் படுவார்கள். அதற்கான முக்கியக் காரணம், அவர்கள் உட்கொள்ளும் சத்தற்ற உணவால் உடலில் ஏற்படும் சத்துக்குறைபாடுதான். அவற்றை சரி செய்யும் விதத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மெக்னீசியம் குறைபாடு ஒருவருக்கு இருந்தால் மிகுந்த சோர்வாகக் காணப்படுவார், பலவீனமாக இருப்பார். கவலை மற்றும் மனச்சோர்விற்கும் இது வழிவகுக்கும். கீரைகள், பாதாம், முந்திரி, பூசணி விதைகள், சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள், டார்க் சாக்லேட், வெண்ணெய் போன்றவற்றில் மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன. இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அதீத சோர்வு, பலகீனம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, கை கால்கள் குளிர்ச்சியாவது, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இருக்கும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும் உடல் சோர்வடைந்து பலவீனமாக இருப்பார்கள். தலை சுற்றல், மயக்கம் வரும். எனவே, இவர்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்டு ஈரல், இறைச்சி, மீன், பால், முட்டை போன்றவற்றிலும் சியா விதைகள் பாதாம், முந்திரி, முருங்கைக்கீரை போன்றவற்றிலும் ஏராளமான இரும்புசத்து இருக்கின்றன.

வைட்டமின் டி குறைபாடு: வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபமும் எரிச்சலும் வரும். எனவே, இவர்கள் சூரிய ஒளியில் தினமும் 15 நிமிடங்கள் நிற்க வேண்டும்.

வைட்டமின் பி, பி6, பி12 குறைவாக இருப்பவர்களுக்கும் உடல் சோர்வு, மயக்கம், எரிச்சல், கோபம் வரும். இவர்களுக்கு நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய வைட்டமின் பி சத்து மிகவும் அவசியம். உற்சாகம் ஏற்பட உதவும் செரட்டோனின் மற்றும் டோபமைன் சுரப்பதற்கு வைட்டமின் பி6 அவசியம். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக ஒமேகா 3 உணவுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆக்சிஜன் நிறைந்த உணவுகள் மற்றும் அதன் பயன்கள்!
Do you feel angry and irritable about anything? This is the reason

வைட்டமின் பி6 மனித உடலில் ஹார்மோன்களை பராமரிக்க உதவுகிறது. இது மனித உடலில் பல செயல்பாடுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வைட்டமின் பி6 முழு தானியங்கள், பச்சை பீன்ஸ், அக்ரூட் பருப்புகள் போன்ற உணவுகளில் அதிகம் உள்ளது. மேலும், இது முட்டை, மீன், இறைச்சி, கல்லீரல் போன்றவற்றிலும் உண்டு. வாழைப்பழங்கள், காலிஃப்ளவர், முட்டைகோஸ், சோயா பீன்ஸ், கேரட் மற்றும் கீரை போன்றவற்றிலும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.

இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கொண்டால், உடல் சோர்வு, மயக்கம், போன்ற உடல் சார்ந்த குறைபாடுகளும், கோபம், எரிச்சல் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளும் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com