பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான் என்றாலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சில பழங்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. அவகேடோ: அவகேடோவில் அதிகமான அளவில் கலோரிகள் உள்ளது. அவகேடோ 100 கிராம் பழத்தில் 160 கலோரிகள் இருக்கிறது. இதில் அதிகமாக ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் உள்ளது. எனவே, டையட்டில் இருப்பவர்கள் இந்த பழத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொல்லப்படுகிறது.
2. தேங்காய்: தேங்காய் தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தேங்காயில் இருக்கும் சதைப்பகுதியை அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இதில் அதிக கலோரி மற்றும் கார்போஹைடரேட் உள்ளது. இனிப்பான சுவை மிகுந்த தேங்காய் ஆரோக்காயமானதாக இருந்தாலும், உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் சற்று தள்ளியிருப்பதே சிறந்ததாகும்.
3. உலர்ந்த பழங்கள்: சாதாரண பழங்களை காட்டிலும் உலர்ந்த பழங்களில் அதிகமான கலோரிகள் உள்ளன. ஒரு கப் உலர்திராட்சையில் 500 கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உலர்ந்த பழங்களைஅளவாக எடுத்துக்கொள்வது நல்லதாகும்.
4. வாழைப்பழம்: வாழைப்பழம் ஆரோக்கியமான பழமாக கருதப்பட்டாலும் இதில் அதிகமான கலோரிகளும், சர்க்கரையும் உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 150 கலோரிகள் உள்ளன. இது 37.5 கிராம் கார்போஹைடரேட் ஆகும். எனவே, ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று வாழைப்பழங்களை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வாழைப்பழத்தை அளவாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
5. மாம்பழம்: மாழ்பழம், அன்னாசிப்பழம் போன்ற பழங்களில் மறைந்திருக்கும் அதிகமான கலோரிகள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிய தடையாக இருக்கும். இந்த பழங்களில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அனைத்து பழங்களும் ஆரோக்கியமானது தான் என்றாலும் சில பழங்களை அதிகப்படியாக சாப்பிடும் போது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு தடையாக இருக்கும். எனவே, இதுப்போன்ற பழங்களை குறைவான அளவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைப்பது சிறந்ததாகும்.