எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 5 வகை ஃபுட் காம்பினேஷன் தெரியுமா?

pineapple with milk
pineapple with milkhttps://www.onlymyhealth.com

நாம் உண்பதற்கு தேர்ந்தெடுக்கும் ஓர் உணவுடன் மற்றொரு உணவையும் சேர்த்து உண்ணும்போது அவை ஒன்றோடொன்று இணைவதால் சில நன்மைகள் கிடைக்கலாம். ஒருசில வகை உணவுகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கி ஜீரணக் கோளாறை உண்டுபண்ணவும் செய்யலாம். அந்த மாதிரி எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 5  வகை ஃபுட் காம்பினேஷன் எவை என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

* பைனாப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்ற அசிடிக் தன்மை கொண்ட பழங்களை பாலுடன் சேர்த்து உண்பது ஜீரணக் கோளாறை உண்டுபண்ணும். இப்பழங்களிலுள்ள அமிலமானது பாலைத் திரியச் செய்து வயிற்றிற்குள் வீக்கம் ஏற்படவும் அசௌகரியம் உண்டாகவும் வழி வகுக்கும்.

* மீன் உணவுகளை பால் பொருட்களுடன் உண்பது ஆரோக்கியம் தராது. ஏனெனில், மீன் உஷ்ணத் தன்மையும் பால் பொருட்கள் குளிர்ச்சியும் கொண்டவை. இவற்றை சேர்த்து உண்ணும்போது உடலின் உஷ்ண நிலையில் மாற்றம் உண்டாகி அசௌகரியம் ஏற்படும். மீனை காய் கறிகள் மற்றும் தானிய உணவுகளுடன் சேர்த்து உண்பது நன்மை தரும்.

* தேனை சூடாக்குவது ஆரோக்கியக் குறைபாட்டை உண்டுபண்ணும். காபி, டீ போன்ற சூடான பானங்களில் தேன் சேர்த்தால் அது உடலுக்குள் சென்று நச்சுக்கள் உருவாக காரணியாகிவிடும். இதனால் ஜீரணக் கோளாறும் மற்ற அசௌகரியம் உண்டாகவும் வாய்ப்பாகும்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் தனித்துவமான 10 அடையாளங்கள்!
pineapple with milk

* பீன்ஸ் மற்றும் சீஸ் இரண்டுமே ஜீரணிக்கக் கடினமான உணவுகள். இவை இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது ஜீரண மண்டலப் பாதையின் பளு அதிகமாகி அஜீரணம், வாய்வு, வீக்கம் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாவது சகஜமாகும்.

* வாட்டர் மெலன், மஸ்க் மெலன், கேண்டலோப் போன்ற பழங்கள் விரைவாக ஜீரணமாகக் கூடியவை. இவற்றை மற்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது வாய்வு உண்டாகவும் புளியேப்பம் வரவும் வாய்ப்பாகும். இவற்றை தனியாக உண்பதே ஆரோக்கியம்.

மேற்கூறிய ஆரோக்கியமற்ற காம்பினேஷன்களை எப்பொழுதும் தவிர்த்துவிடுவது நலமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com