சர்க்கரை நோயை சமநிலைப்படுத்தும் 6 மசாலா பொருட்கள் தெரியுமா?

வெந்தயத் தண்ணீர்
வெந்தயத் தண்ணீர்https://www.herzindagi.com
Published on

நீரிழிவு நோய் பற்றியும், இரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. நம் சமையல் அறையில் இருக்கும் ஆறு வகை மசாலாப் பொருட்களைக் கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரியவில்லை. அப்படிப்பட்ட பொருட்கள் எவை எவை என்பதையும் அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

* வெந்தயம் நார்ச்சத்தும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு பொருள். இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் முதல் உணவாக வெறும் வயிற்றில் அவ்விதைகளை மென்று தின்று அந்த தண்ணீரையும் குடித்துவிட்டால் சர்க்கரை அளவு குறையும்.

* பட்டை (Cinnamon) என்ற மசாலாப் பொருள் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்யும். பட்டையில் டிகாஷன் செய்து இரவில் குடிப்பது நல்ல பலன் தரும்.

* மஞ்சள் தூளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள்  இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் குணம் கொண்டது. மஞ்சள் தூளில் டிகாஷன் செய்து அல்லது மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து குடித்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

இதையும் படியுங்கள்:
இதயத்திற்கு இதம் தரும் தட்டைப்பயிறின் நன்மைகள்!
வெந்தயத் தண்ணீர்

* இஞ்சியிலுள்ள ஷோகால்ஸ் மற்றும் ஜிஞ்சரால்ஸ் (Shogaols and Gingerols) என்ற பொருள்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். இஞ்சியை உணவுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம் அல்லது ஒரு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று தின்னவும் செய்யலாம்.

* தண்ணீரில் சில இலவங்கங்களைப் போட்டு அந்த (infused) நீரை  அருந்துவது இன்சுலின் ஸின்தஸிஸை ஊக்குவிக்க உதவும்.

* கருப்பு மிளகில் பைப்பரைன் (Piperine) என்றொரு பொருள் உள்ளது. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு உதவி புரியும்.

மேலே கூறிய மசாலாப் பொருள்களை உபயோகித்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com