‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. அதற்காக நோய் நொடியற்ற வாழ்வை எவருமே எதிர்பார்க்க முடியாது. நோய்கள் வரும்; குணமாகும். ஆனால், சில நோய்கள் உயிர் பயம் கொள்ளச் செய்பவையாக இருக்கும். அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றுதான் கேன்சர். அது போன்ற வியாதிகளை வருமுன் காப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதே புத்திசாலித்தனம். இங்கு கேன்சர் நோயைத் தடுக்க உண்ண வேண்டிய ஏழு வகை உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
* வால் நட்டில் உள்ள பெடுங்குலேஜின் (Pedunculagin) என்ற பொருள் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடியது.
* பெரி வகைப் பழங்கள் வைட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் நிறைந்தவை. இவை புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்க வல்லவை.
* டார்க் சாக்லேட்களில் உள்ள பாலிபினால்கள் கேன்சரை தடுக்கும் குணம் கொண்டவை.
* கேன்சரை தடுக்கக்கூடிய வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் முட்டைகோஸ், பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்களில் அதிகம் உள்ளன.
* கிரேப் பழங்களில் உள்ள ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டானது கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்கக் கூடியது.
* கேன்சர் வரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய குணங்கள் கொண்ட பாலிபினால்கள் ஆப்பிள் பழத்தில் அதிகம் உள்ளன.
* கேரட்டில் உள்ள வைட்டமின் K, வைட்டமின் A மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்கும் குணம் கொண்டவை. மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு கேன்சர் பயமின்றி வாழ்வோம்.