மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் பிரச்னையை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Do you know about Multiple Sclerosis?
Do you know about Multiple Sclerosis?
Published on

ல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (Multiple sclerosis) என்பது, ஒருவித அழற்சியினால் (inflammatory auto immune disease) உருவாவது. சுருக்கமாக இது MS என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, தவறுதலாக ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடும்போது இந்த பாதிப்பு வரலாம். இதனால், நரம்பு  மண்டலத்தில் இருக்கும் , குறிப்பாக மூளை, தண்டுவடம் இவற்றில் காணப்படும் நரம்பு பைபர்களைச் சுற்றியிருக்கும் மெல்லிய படலம் பாதிக்கப்பட்டு (demyelination and axonal loss), மூளை பலவீனமடைந்து, தொடர்ச்சியாக உடலில் பல உறுப்புக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பினால் இது வரலாமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சுற்றுப்புறச்சூழல், பரம்பரை பாதிப்பு போன்ற வேறு பல காரணங்களும் இதற்கு உண்டு. வைட்டமின் டி குறைபாடு இதில் முக்கியப் பங்கு வகிப்பதால் அதை நிவர்த்தி செய்ய உடலில் வைட்டமின் டி சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

எந்த வயதினரை இந்த நோய் அதிகம் பாதிக்கும்?

இந்நோய் ஆண்களை விட அதிகமாக இளம் பெண்களை பாதிக்கும். பொதுவாக, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இது வருகிறது. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் இந்தச் பிரச்னை அதிகம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அனேகமாக இல்லாமல் இருந்தது. தற்சமயம் பாதிக்கப்பட்ட சிலரைப் பார்க்க முடிகிறது.

MS இருப்பதை எவ்விதம் கண்டறிவது? இதற்கான பொது அறிகுறிகள் என்ன?

இதன் அறிகுறிகள் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபட்டு இருக்கக் கூடும். ஆனால் பொதுவாக, கண் பார்வை குறைபாடு, அல்லது காட்சிகள் இரட்டையாகத் தெரிதல், நடக்கும்போது நிலையாக இல்லாத தள்ளாட்டம், அசைவுகளில் பலமின்மை, அதீத உணர்வு அல்லது உணர்ச்சியே அற்ற நிலை, தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அசைவுகளில் சிக்கல், சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளிப்படல், மலச் சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு இந்நோயின் அறிகுறிகள். நோயாளிகளுக்கு எந்த விதமான நரம்பியல் பிரச்னைகள் எவ்வளவு இடைவெளியில் ஏற்படுகின்றன, அவற்றின் வெளிப்பாடு எவ்விதம் என்பதை எல்லாம் கண்காணித்து இதற்கு சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இந்நோய்க்கு வேறு என்ன சோதனைகள் செய்யப்படுகின்றன?

மூளையிலும் தண்டுவடத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்படும். கண்களின் நரம்புகளில் பாதிப்பு உள்ளதா என்ற சோதனைகள், இரத்த சோதனைகள் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள (Cerebrospinal Fluid - CSF) சோதனைகள் அதாவது, தண்டுவடத்தில் இருக்கும் திரவத்தை எடுத்து சோதித்தல் போன்றவை செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
கொழுப்பில் என்ன நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு?
Do you know about Multiple Sclerosis?

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படும். பிறகு உட்கொள்ளும் மருந்துகளாகத் தரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும். பாதிப்பு மீண்டும் வராமல் தடுக்கவும் மருந்துகள் உதவுகின்றன. நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், இதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம்.

மருத்துவர், நோயாளிகளுக்கு இந்த நோயைப் பற்றிய விளக்கம் தருவதோடு, சரியான வழிகாட்டுதலும் தர வேண்டும். சரியான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, வைட்டமின் டி அதிகரித்தல், சரிவிகித உணவு இவற்றை மருத்துவர் சொன்னபடி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

- நரம்பியல் நிபுணர் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com