கொழுப்பு என்பது நமது உடலின் சக்தியை (Energy) உற்பத்தி செய்யக்கூடிய ஒன்று. நாம் உண்ணும் உணவின் மூலம் நீர், கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகியன கிடைக்கின்றன. அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து நம் உடல் சக்தியாக செலவிடுகிறது.
நமது உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பில், நல்ல கொழுப்பு என்பது HDL (High Density Lipoprotein) உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. அதன் முக்கிய வேலை, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை வெளியேற்றுவது. இரத்தக் குழாய்களுக்கும் இதயத்துக்கும் நன்மை தரக்கூடியது நல்ல கொழுப்பு.
கெட்ட கொழுப்பு என்பது LDL (Low Density Lipoprotein) என்பதாகும். உடலில் இரத்தக் குழாய்களில் கொழுப்புக் கட்டிகள் படிவதற்கு அதன் லோ டென்சிட்டிதான் காரணம் ஆகும். இது பரவலாக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ளது.
நல்ல சத்து மிகுந்த உணவுகளை விட்டுவிட்டு நாம் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத உணவுகளை உண்ணும்போது, அதிலிருந்து கிடைக்கின்ற கெட்ட கொழுப்பானது இரத்தக் குழாய்களில் அங்குமிங்குமாகப் படியத் தொடங்குகிறது. இதுவே தொடர்ந்து நடைபெறும்போது சிறு சிறு கொழுப்புப் படிமங்கள் கட்டிகளாக மாறுகின்றன. அதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் இதயத்தின் இயல்பான செயல்பாடு குறையத் தொடங்குகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான தேவையற்ற கொழுப்பினைக் கரையச் செய்ய ஒரே வழி, நல்ல கொழுப்பு நிறைந்த உணவினை எடுத்துக்கொள்வதும், உடலுக்கு நிறைய உழைப்பு தருவதும்தான். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டும் நமது உடலில் கெட்ட கொழுப்பு தேங்காமல் வைத்துக்கொள்ளும் இருவழிப் பாதைகளாகும்.
பீட்ரூட், பூண்டு, கீரைகள், பழங்கள், வெண்பூசணி, புடலங்காய் மற்றும் சமைக்காத உணவுகளில் நல்ல கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் கரைக்கும் வல்லமை நாம் குடிக்கின்ற சுடு தண்ணீருக்கு உண்டு. உணவு உண்ட பின்னர் அருந்துகின்ற மிதமான சுடுநீர், உணவில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினைக் கரைக்கும் தன்மை கொண்டது.