உலர் திராட்சையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய ஆரோக்கியப் பலன்கள் இருக்கின்றன. இதில் அதிகமாக ஊட்டச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. உலர் திராட்சை ஊறிய நீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உலர் திராட்சை நீரை குடிப்பதால், முகத்தில் வயதான தோற்றம் மறைந்து சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
2. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், செரிமான அமைப்பையும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உணவு சுலபமாக செரிமானம் ஆவதற்கு இந்நீர் உதவுகிறது. இரைப்பை குடல் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாக்கிறது.
3. உலர் திராட்சையில் வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் உள்ளதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அடிக்கடி உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
4. உலர் திராட்சையில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. இது உடலில் உள்ள சோடியத்தை சீராக வைத்துக்கொள்வதின் மூலமாக இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் Polyphenol உள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து இதய சம்பந்தமான நோய், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
5. உலர் திராட்சையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது. இது சிவப்பு அணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது. எனவே, உலர் திராட்சை ஊற வைத்த நீரை அருந்துவதால், அனிமியா நீங்கி உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
6. உலர் திராட்சையில் போரான், கால்சியம் உள்ளது. இது எலும்பின் ஆரோக்கியத்திற்கும், பலத்திற்கும் பெரிதும் உதவுகிறது. உலர் திராட்சையை ஊற வைத்த நீரை அருந்துவதால், எலும்புகள் பலம் பெறுவதோடு Osteoporosis போன்ற நோய்கள் வராமல் காக்கிறது.
7. உலர் திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தை பிரீரேடிக்கலில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு மற்றும் பளபளப்பான சருமத்திற்கும் உதவுகிறது.
8. உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து உணவு உண்ட முழு திருப்தியை கொடுப்பதால், அதிகமாக உணவு எடுத்துக்கொள்வது குறைகிறது. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. இதனால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல், அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதையும் கட்டுக்குள் வைக்க முடிகிறது.