கற்றாழைச் சாற்றின் தீங்கு விளைவிக்கும் பண்பை பற்றி தெரியுமா?

கற்றாழைச் சாறு பலருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது தீமையான விளைவுகளை தருகிறது.
சோற்றுக் கற்றாழை...
சோற்றுக் கற்றாழை...
Published on

இயற்கையில் கிடைத்த ஒப்பற்ற மருத்துவக் குணங்கள் மிக்க ஒரு தாவரம் தான் கற்றாழைச் செடி. கற்றாழை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் , முகத்தில் உள்ள கருமைகளை நீக்கவும் , முகத்தை பளபளப்பாக மாற்றவும் கற்றாழைச் சாறு பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தை மேம்படுத்தும் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் இது அழகு சாதன பொருட்கள் பலவற்றில் சேர்க்கப்படுகிறது.

பலர் கற்றாழை சாற்றை பல வழிகளில் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சரும நிறத்தை மேம்படுத்தி பளபளப்பாக வைக்கிறது. அதோடு சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சில நேரங்களில் சந்தையில் கிடைக்கும் கற்றாழை சாற்றில் ரசாயனங்கள் அல்லது வாசனை திரவியங்களும் சேர்க்கப்படுகின்றன. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். கற்றாழை மடலிலிருந்து எடுக்கப்பட்ட புதிய ஜெல்லைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கற்றாழையின் தீமைகள்:

கற்றாழைச் சாறு பலருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது தீமையான விளைவுகளை தருகிறது. பெரும்பாலான மக்கள் இதன் தீமை பண்புகளை உணர்வதில்லை.

எல்லோருடைய சருமத் தேவைகளும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலரது சருமத்தின் பண்புகளுக்கு ஏற்ப கற்றாழைச் சாறு செயல்படுவதில்லை. சிலருக்கு சருமம் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும் . அதனால், அவர்களுக்கு கற்றாழையால் ஒவ்வாமை அல்லது எரிச்சல் ஏற்படலாம். சிலருக்கு அரிப்பு, எரிதல் அல்லது சரும சிவத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

கற்றாழைச் சாற்றில் நிறைய வேதிப் பொருட்களும் உள்ளன. அதை சரியான முறையில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். சில நேரம் அதில் உள்ள ரசாயனங்கள் வெளியேறாமல் தங்கி இருந்தாலும் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் கற்றாழை அரிப்பையும் சிவத்தலையும் உண்டு பண்ணுகிறது. ஒரு சிலருக்கு தலைவலியையும் உடல் குளிர்ச்சியையும் ஏற்படுத்தும். எந்தவொரு புதிய பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். இதில் சிறிது தீமை இருந்தாலும் அது எல்லாருக்கும் பொதுவானது அல்ல. அதே நேரம் இந்த ஒவ்வாமைகள் அனைத்தும் தற்காலிகமானது தான்.

இதையும் படியுங்கள்:
கற்றாழை ஜூஸை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!
சோற்றுக் கற்றாழை...

கற்றாழை வாய்வழி மருந்து பொருட்களாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஆரோக்கியமாக இருப்பவருக்கு தான் மேலும் நன்மை தரும். சர்க்கரை நோயுள்ளவர்கள் கற்றாழை சாற்றை உட்கொண்டால் , அது உடலில் சர்க்கரை அளவை அதிகமாக குறைக்க கூடியது. சரிவர கழுவாமல் சாற்றை ஜூசாக்கி குடித்தாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும். கற்றாழையின் நன்மை தீமை அறிந்து அதைப் பயன்படுத்துங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com