அதிகம் அறியப்படாத ஐந்து வகை ஆரோக்கிய நட்ஸ் உணவுகள் தெரியுமா?

Do you know five healthy nut foods?
Do you know five healthy nut foods?https://www.vecteezy.com

டலுக்கு ஆரோக்கியம் தருபவை என்னென்ன என்பதை யோசிக்கையில், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின், மினரல், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் தரக்கூடிய, பருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மீன், தாவரக் கொட்டைகள் என பட்டியல் ஒன்று நம் கண் முன் தோன்றும். நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால், நம்மில் பலரும் பொதுவாக உட்கொள்வது வால்நட், பாதாம், முந்திரி மற்றும் வேர்கடலை போன்றவை மட்டுமே. இவற்றை தாண்டியும் வேறு பல நட்ஸ் வகைகள் உள்ளன. அவற்றில் ஆரோக்கியம் நிறைந்த ஐந்து நட்ஸ் தரும் ஊட்டச் சத்துக்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

இனிப்பு சுவை கொண்ட சிறிய சைஸ் ஹேசல்நட் (Hazel Nut) கொட்டை, மரத்திலிருந்து கிடைக்கக்கூடியது. இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. ஆக்சிடேடிவ் மெடிசின் அண்ட் செல்லுலார் லாங்கிவிட்டி ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஹேசல்நட்டில் வைட்டமின் E, மக்னீசியம், காப்பர், செலீனியம், ஃபொலேட் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. இவை இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும், சீரான செரிமானம் நடைபெறவும், வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவக்கூடிய ஓர் அபூர்வ நட்ஸ் ஆகும். 100 கிராம் ஹேசல்நட்டில் 628 kcal சக்தி, 15 கிராம் புரோட்டீன், 9.7 கிராம் நார்ச்சத்து, 163  mg மக்னீசியம், 680 mg பொட்டாசியம் உள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை (USDA) கூறுகிறது.

மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் கொண்ட மற்றொரு நட்ஸ் பேக்கன் (Pecan) என்பது. வைட்டமின் E உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்தது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்; இதய நாளங்களில் நோய் வராமல் பாதுகாக்கும். மெட்டபாலிச குறைபாடுகளைக் களையும். 100 கிராம் பேக்கனில் 691 kcal சக்தி, 9.17 கிராம் புரோட்டீன், 9.6 கிராம் டயட்டரி ஃபைபர் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கடாமியா (Macadamia Nuts) நட்ஸிலும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. இது LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; உடல் எடையை பராமரித்து, உடல் எடையை தடுக்கும்; சக்தியைப் பெருக்கவும், நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவி புரியும். 100 கிராம் மக்கடாமியாவில் 716 kcal சக்தி, 7.79 கிராம் புரோட்டீன், 8 கிராம் ஃபைபர், 70 mg கால்சியம் உள்ளதாக (USDA) கூறுகிறது.

பிரேசில் நட்ஸ் (Brazil Nuts)ல் செலீனியம் அதிகம் உள்ளது. இது தைராய்ட் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தவும் மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் உதவி புரிகிறது. செலீனியம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் இதய நாளங்களில் நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. இந்தக் நட்ஸில் எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடிய கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்களும் அதிகம் உள்ளன. 100 கிராம் பிரேசில் நட்ஸில் 659 kcal சக்தி, 14.32 கிராம் புரோட்டீன், 7.5 கிராம் ஃபைபர், 160 mg கால்சியம், 376 mg மக்னீசியம் உள்ளதாக USDA கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
உயிர்ப்புடன் இருக்கும் நரசிம்மர் கோயில் பற்றி தெரியுமா?
Do you know five healthy nut foods?

பைன் நட்ஸ் (Pine Nuts) அதிக சக்தி தரக்கூடியது. இதில் கொழுப்புச் சத்தும், கலோரி அளவும் அதிகமாக உள்ளதால் இதை குறைந்த அளவில் உட்கொள்வதே சிறப்பாகும். இதிலுள்ள அதிகளவு புரோட்டீனும் நார்ச்சத்தும் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. 100 கிராம் பைன் நட்ஸில் 673 kcal சக்தி, 13.7 கிராம் புரோட்டீன், 3.7 கிராம் டயட்டரி ஃபைபர், 251 mg மக்னீசியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற நட்ஸ்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாடுகளையும் சிறப்புறச் செய்வதற்கு உதவி புரிவதால் எந்த சூழ்நிலையிலும் இவற்றைத் தவிர்க்காமல் அளவோடு உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com