இந்த இரண்டும் நீரிழிவை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன தெரியுமா?

சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான்https://niceswapet.xyz
Published on

நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறுகுறிஞ்சான், வேப்ப இலை ஆகிய இரண்டும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இரண்டும் நீரிழிவை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* சிறுகுறிஞ்சானில் இருக்கும் 'ஜிம்னிக்'அமிலம் இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, நமது உடலில் உள்ள கணையத்தில் இருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடு இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

இது தவிர, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிஸரைடின் அளவையும் இது குறைக்கிறது. இந்த செயல்களில் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் 'ஜிம்னிக்'அமிலமே காரணமாகும். இது தவிர, சிறுகுறிஞ்சான் குடல் உறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது. அதனால்தான் சர்க்கரை நோயை சிறுகுறிஞ்சான் கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்கிறார்கள்.

சிறுகுறிஞ்சானில் நிறைய நீர் விட்டு சிறிதளவு சீரகம் சேர்த்து காய்ச்சி அந்த தண்ணீரை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். சீரகம் சேர்க்காமல் வெறும் குறிஞ்சான் கீரையுடன் நீரை சேர்த்து காய்ச்சி குடித்தாலும் நீரிழிவு நோய் படிப்படியாக குறைந்து வருவதை உணரலாம்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்வது நலம். ஏனெனில், வேம்பு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க, கசப்பு சுவை கொண்ட அட்ரினிலனின் மற்றும் குளுக்கோசை தூண்டுகிறது.

வேம்பு
வேம்புhttps://tamil.webdunia.com

இது தவிர இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இந்த வேம்பினை வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு விதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் எழுதுவதில் விருப்பமுள்ளவரா? இந்த பத்து டிப்ஸ் உங்களுக்குத்தான்!
சிறுகுறிஞ்சான்

சர்க்கரை அதிகமாகி இரண்டு கண்களும் சிவந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு அரை டம்ளர் வேப்பிலை சாறு கொடுக்க, ஒரு மணி நேரத்திற்குள் படிப்படியாக கண்ணின் நிறம் மாறி இயல்பு நிலையை அடைவதை காணலாம். அவர் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவதையும் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com