உடல் வலி குறைய, தசைகள் வலுவாக உதவும் கமர்காஸ் தெரியுமா?

Kamarkas Mooligai
Kamarkas Mooligai
Published on

மர்காஸ் என்பது தெற்கு ஆசியாவில் வளரும் பலாஷ் (Palash) என்ற மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை பிசின் போன்ற பொருள் ஆகும். இது நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சமையலில் சேர்க்கப்பட்டுவரும் ஒரு மூலிகைப் பொருளாகும். இதனைப் பெரும்பாலும் பெண்கள் முதுகு வலி, பலவீனம், உடல் வலி போன்றவற்றை குணமாக்கவும் பிரசவத்திற்குப் பிறகு உண்டாகும் தளர்ச்சியுற்ற தசைகளை சுருக்கி பழைய நிலைக்குக் கொண்டு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். கமர்காஸிலிருந்து நம் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கமர்காஸில் உள்ள டேன்னின் மற்றும் ஃபிளவனாய்ட் போன்ற இயற்கைக் கூட்டுப்பொருள்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணமுடையவை. இவை விரிவடைந்த தசைகளை சுருக்கவும் ஃபிரீ ரேடிக்கல்களின் அளவைக் குறைக்கவும் உதவும். கமர்காஸில் அதிகளவில் நிறைந்துள்ள க்ளைக்கோசைட்ஸ் உடலின் ஒட்டுமொத்த தசைகளின் சீரமைப்பிற்கு உதவி புரிகின்றன.

மேலும், இதிலுள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் எலும்புகள் மற்றும் தசைகளின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றன. கமர்காஸ் உடலுக்கு அதிக சக்தியும் புத்துணர்வும் தந்து வாழ்நாளை நீடிக்க உதவுமென ஆயுர்வேதம் கூறுகிறது. குளிர் காலங்களில் உடலுக்குக் கூடுதல் உஷ்ணமும் ஊட்டச் சத்துக்களும் தேவைப்படும். கமர்காஸ் உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கவும், குளிரினால் சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கவும் செய்யும். இதன் புத்துணர்ச்சியூட்டும் குணமானது உடலுக்கு உற்சாகம் தரவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

இந்தப் பிசின் சிறிதளவு ஈரப் பசை கொண்டதாக இருப்பதால் வயிற்றில் மந்த நிலை மற்றும் வீக்கம் போன்றவை உண்டாவதைத் தடுத்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இனப்பெருக்கம் தடையின்றி நடைபெறவும் உதவி புரியும்.

கமர்காஸில் உள்ள பயோ ஆக்டிவ் கூட்டுப்பொருள்கள், உடல் வலிக்கு முக்கிய காரணியாகும். வீக்கங்களைக் குறைக்க பெரிதும் உதவும். வீக்கம் உண்டாவதற்கான வழிகளை அடைத்து, ஆர்த்ரைடிஸ், மூட்டுக்களில் வலி, தசை அழற்சி போன்ற நோய்கள் உண்டாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 4 தவறுகள்!
Kamarkas Mooligai

குழந்தை பெற்ற இளம் தாயின் ஆரோக்கியம் மேம்பட கமர்காஸ் லட்டு கொடுப்பது வழக்கம். இது நெய், வெல்லம், நட்ஸ்  மற்றும் கமர்காஸ் சேர்த்து செய்யப்படுகிறது. மாதவிடாய் சமயங்களில் இந்த லட்டை பெண்கள் உட்கொண்டால், அவர்களின் இடுப்புப் பகுதியில் உண்டாகும் வீக்கங்கள் குறைந்து, அடி வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி குறையும்.

நீண்ட காலமாக உடல் வலி குறைய இந்த மூலிகைப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தபோதும், சமீப கால ஆராய்ச்சி இதை உறுதிப்படுத்தியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை கலந்தாலோசித்த

பிறகு இதை உட்கொள்வது நலம். கமர்காஸை நம்பகத் தன்மை கொண்ட கடைகளில் வாங்கவும், அளவோடு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. பலாஷ் மரத்தை பிரம்ம விருட்சம் எனவும் அழைக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com