சரும பளபளப்பு, தலைமுடி ஆரோக்கியம் காக்கும் 9 பழங்கள் தெரியுமா?

சரும பளபளப்பு, தலைமுடி ஆரோக்கியம் காக்கும் 9 பழங்கள் தெரியுமா?
https://noloveov.shop

மது உடல் மற்றும் சரும பளபளப்பிற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ அதிகம் உள்ள பழ வகைகள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வைட்டமின் ஈ அதிகமுள்ள பழ வகைகள்:

1. அவகேடோ: அவகேடோ பழத்தில் அதிக அளவில் வைட்டமின் ஈ சத்து உள்ளது. இதில் நல்ல ஆரோக்கியமான சத்துக்களும் கொழுப்புகளும் நிறைந்துள்ளன. புரதச்சத்தும் பொட்டாசியமும் அதிகம் உள்ளன. இவை சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

2. பிளாக் பெரிக்கள்: பிளாக் பெரிக்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் இருக்கின்றன. இவை உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈயை தாராளமாக வழங்குகின்றன.

3. மாம்பழம்: மாம்பழத்தில் வைட்டமின் சி யுடன் சேர்த்து வைட்டமின் ஈயும் உள்ளது. அதனால் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிடும்போது அவை உடலுக்கு தேவையான பளபளப்பையும் தலைமுடி ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

4. ராஸ்பெரிஸ்: இவற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளன. அதனால் நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் ஈ நமக்குக் கிடைக்கும். இதில் நார்ச்சத்தும் பிற வைட்டமின்களும் உள்ளதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

5. பப்பாளி: இதில் வைட்டமின் ஈ யுடன் சேர்த்து வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் நல்ல செரிமானத்திற்கு உதவும் என்சைம்களும் இதில் நிறைந்துள்ளன. பப்பாளிப் பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் சரும பளபளப்பிற்கும் கண் பார்வை கூர்மைக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும்.

6. கொய்யா: கொய்யாப்பழத்தில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது அதனுடன் குறிப்பிட்ட அளவு வைட்டமின் ஏயும், வைட்டமின் ஈ யும் உள்ளன. இதில் நார்ச்சத்தும் பிற நியூட்ரியன்களும் அடங்கியுள்ளன. இவற்றை தினமும் உண்ணும் போது சருமம் ஆரோக்கியமாக மிளிரும். பளபளப்பாக மின்னும். குடல் இயக்கம் நன்றாக செயல்படும். சிறப்பான செரிமானம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சியால் ஏற்படும் தசை வலிகளும் அதற்கான தீர்வுகளும்!
சரும பளபளப்பு, தலைமுடி ஆரோக்கியம் காக்கும் 9 பழங்கள் தெரியுமா?

7. ஆப்ரிகாட்ஸ்: இதில் பெருமளவு வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவற்றை உலர வைத்து உண்ணும்போது இதில் உள்ள வைட்டமின் சத்து அப்படியே நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். இதில் நார்ச்சத்தும் வைட்டமின் ஏயும் பொட்டாசியமும் உள்ளது. இவற்றை அடிக்கடி உண்ணும்போது, நகங்கள் மற்றும் சரும பளபளப்பிற்கு உதவுகிறது.

8. கிவி: கிவி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஈ யும் உள்ளது ஆன்டி ஆக்சிடென்ட்களும் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் இவற்றை அடிக்கடி உண்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக மின்னும்.

9. ப்ரூன்ஸ்: ப்ரூன்ஸ் என்பவை உலர வைத்த பிளம்ஸ் பழங்கள் ஆகும். இவற்றில் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. மேலும், இதில் வைட்டமின் ஈ யும், பொட்டாசியமும் நார்ச்சத்தும் நிரம்பி இருப்பதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com