உடற்பயிற்சியால் ஏற்படும் தசை வலிகளும் அதற்கான தீர்வுகளும்!

உடற்பயிற்சி
Exercisehttps://tamil.boldsky.com

டற்பயிற்சியால் வரும் உடல் வலி பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக ஜிம்முக்கு செல்லும் ஒருவர் திரும்பவும் பழைய முறைக்கே திரும்பும் வகையில் இந்த  உடல் வலி சிக்கலை உருவாக்கக் கூடியதாக உள்ளது.

உடற்பயிற்சி வலிக்கான காரணங்கள்: பொதுவாகவே, உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் தசை வலிகள் சாதாரண நிகழ்வாகும். புதிதாக நீங்கள் உடற்பயிற்சி செய்ய தொடங்கி இருந்தாலோ அல்லது தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டாலோ தசைகளில் வலி ஏற்படும். தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது தசைநார்களுக்கு சிறிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். இந்த மைக்ரோட்ராமா என்பது ஒரு இயல்பான பகுதிதான். இது இறுதியில் தசை வளர்ச்சி மற்றும் வலிமை அதிகரிக்க வழி வகுக்கும்.

அழற்சி எதிர்வினை: மைக்ரோட்ராமா ஒரு அழற்சி எதிர்வினையை தூண்டும். உடல் வெள்ளை இரத்த அணுக்கள், ப்ரோஸ்டாக்லாண்டின்கள் (அழற்சி குறிப்பான்கள்) ஊட்டச்சத்துக்களை தசைகளுக்கு அனுப்புகிறது. இதனால் உடலில் ஒரு வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வலியுடன் ஒரு புண் உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. தசைநார்களுக்கு சேதம் உண்டாவதால் சுற்றியுள்ள திசுக்களில் செல் உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதால் வலியைத் தூண்டும்.

தசை பிடிப்பு: உடற்பயிற்சியால் சில நேரங்களில் தசை பிடிப்பு ஏற்பட்டு வலியை உண்டாக்கும். பொதுவாகவே, லாக்டிக் அமிலம் தசை வலியை உண்டாக்கும் என்று ஒரு தவறான கருத்து உள்ளது. தீவிர உடற்பயிற்சியின்போது லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படும்போது அவை தசைகளிலிருந்து விரைவாக அழிக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்குள் இது நடந்து விடுவதால் தசை வலிக்கு இது காரணமல்ல. லாக்டிக் அமிலம் தசைகளில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். ஆனால், இது வலியிலிருந்து வேறுபட்டது. தசைநார் சேதத்துடன் தசைநார்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் இணைப்பு திசுக்களும் மைக்ரோட்ராமாவை அனுபவிப்பதால் வலிக்கு வழி வகுக்கும்.

ஃப்ரீ ரேடிக்கல்கள் அதிகரிப்பு: உடற்பயிற்சியானது ஃப்ரீ ரேடிக்கல்களில் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுப்பதால் செல்லுலார் கூறுகளை சேதப்படுத்துவதன் மூலம் தசை வலி உண்டாகும். உடற்பயிற்சிகளின் தீவிரத்தை குறைப்பது, பயிற்சி செய்யும் கால அளவை படிப்படியாக அதிகரிப்பது, தசைகளை பழக்கப்படுத்துவதும் வலிகளின் தீவிரத்தை குறைக்க உதவும். வொர்க்அவுட்டுக்கு முன்பு வார்ம் அப் செய்யுங்கள். முறையான வார்ம்-அப்கள் மற்றும் கூல்-டவுன்கள் தசைகளை உடற்பயிற்சிக்கு தயார்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
முன்னே கசக்கும்! அதுவே பின்னே இனிக்கும்! புரியலையா?
உடற்பயிற்சி

நடைப்பயிற்சி அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இவை உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் உதவும். உடல் வலி மற்றும் கடுமையான வீக்கத்திற்கு ஐஸ் பேக்கை பயன்படுத்தலாம். ஐஸ் கட்டிகள் உடற்பயிற்சியின் முதல் நாளுக்குப் பிறகு ஏற்படும் உடல் வலியைக் குறைக்கும். அதேபோல், வலி கண்ட தசைகள் குணமடைய ஓய்வு எடுப்பதும், போதுமான தூக்கத்தை பெறுவதும் முக்கியம்.சேதமடைந்த தசைகளை வலுப்படுத்த உடலுக்கு திரவங்கள் தேவை.உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மற்றும் போதுமான அளவு புரதத்துடன் கூடிய உணவை உட்கொள்வது தசை வலிகளை போக்குவதுடன் வளர்ச்சியையும் ஆதரிக்கும்.

இப்படி உடற்பயிற்சியால் ஏற்படும் வலி என்பது இயல்பானதுதான். ஆனால், அவற்றிற்கு மசாஜ் செய்வதும், வலி நிவாரணி ஜெல் அல்லது க்ரீம் உபயோகிப்பது போன்ற சிறந்த தீர்வுகளும் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com