குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Do you know the benefits of eating cabbage in winter?
Do you know the benefits of eating cabbage in winter?https://www.hindutamil.in

ட்டச்சத்துகளின் பவர் ஹவுஸாக விளங்கும் முட்டைக்கோஸ், குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக உள்ளது. உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைகோஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கேன்சரை தடுக்கிறது: முட்டைக்கோஸில் அடங்கியிருக்கும் சல்பர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் குறிப்பாக புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றலைக் கொடுக்கிறது. கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோசுக்கு கலரை கொடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக இருக்கின்றன.

வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது: முட்டைக்கோஸில் இருக்கும் பலவிதமான ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுகின்றன.

மூளை ஆரோக்கியம்: முட்டைக்கோஸில் நிறைந்திருக்கும் அந்தோசபனின்ஸ், வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் போன்றவை மூளையை புத்துணர்வாக வைத்து இருக்கின்றன.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்: அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி ஏனென்றால், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது உயர் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவும்.

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலும் முகமும் எப்போதும் இளமை தோற்றத்துடன் காணப்படும். களைப்பு நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

முட்டைக்கோஸ் சாற்றுடன் கேரட் சாற்றையும் சேர்த்து உப்பு போடாமல் சாப்பிடலாம் கண் பார்வை கூர்மையடையும்.

முட்டைக்கோஸை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பொறியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

முட்டைக்கோஸ் சாற்றை தனியாக பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

முட்டைக்கோஸில் உள்ள உயிர் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால நோய்களுக்கான மருந்து வீட்டிலேயே இருக்கு!
Do you know the benefits of eating cabbage in winter?

உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் அயோடின் உப்பு, முட்டைகோஸில் அதிகமாக இருக்கிறது. முட்டைகோஸ் ஜலதோஷத்தை போக்கக் கூடியது.

மூட்டு வீக்கம், வயிற்றுப் பொருமல், சொரி சிரங்கு போன்றவை குணமாகும். இரத்தம் சுத்தமாவதற்கும் வயிற்றுப்புண் குணமாவதற்கும் இதைப் பருகலாம்.

முட்டைக்கோஸ் சமைக்கும்பொழுது அதில் இருந்து வரும் ஒருவித வாடையைப் போக்க இஞ்சியை துண்டாக நறுக்கி அதற்குள் போட்டால் போதும்.

முட்டைக்கோஸை தனியாக சமைக்காமல் அதனுடன் கேரட் அல்லது அவரைக்காய், பீன்ஸ் இவற்றை சேர்த்து சமைத்தால் இன்னும் கூடுதலாக குளிர்காலத்திற்கு எதிர்ப்பு சக்தியை தரும் சத்து கிடைக்கும்.

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முட்டைக்கோஸை அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட்டாலே போதும். சளி, ஜலதோஷம், இருமல் போன்றவை வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com