நாபா முட்டைக்கோசின் நற்பயன்கள் தெரியுமா?

Do you know the benefits of napa cabbage?
Do you know the benefits of napa cabbage?https://www.tastingtable.com

ம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைத்  தன்னகத்தே கொண்டு குறைந்த அளவு கலோரி தரக்கூடிய ஒரு வெஜிடபிள்தான் நாபா முட்டைக்கோஸ் (Napa Cabbage). இது ஆரம்பத்தில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அதிகளவில் உண்ணப்பட்டு வந்தது. பின் அமெரிக்கா, யூரோப் போன்ற பல நாடுகளிலும் பரவி அனைவரும் உண்டு வருகின்றனர். இதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

இந்தக் காயிலுள்ள வைட்டமின் A, C, K ஆகிய சத்துக்களானது மொத்த உடலின் சரும மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கக் கூடியவை. உடலின் நோயெதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றன.

நாபா முட்டைக்கோசில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது சீரான செரிமானத்திற்கு உதவுவதோடு, மொத்த ஜீரண உறுப்புகளையும் இலகுவாக இயங்க வைக்கிறது. மலச்சிக்கல் நீங்கி, கழிவுகள் சிரமமின்றி வெளியேறுகின்றன. மேலும், கொழுப்புகளின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பலமாக்குகின்றன.

பீட்டா கரோட்டீன் மற்றும் ஃபிளவோனாய்ட்ஸ் போன்ற ஃபைட்டோ ந்யூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) இக்காயில் அதிகம் உள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலிலுள்ள ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதன் மூலம் நாள்பட்ட வியாதிகள் வரும் வாய்ப்பு குறைகிறது.

இதையும் படியுங்கள்:
அருகுலா கீரையின் ஆரோக்கிய நன்மைகளை அறிவோமா?
Do you know the benefits of napa cabbage?

இதிலுள்ள க்ளுக்கோஸினோலேட்ஸ் (Glucosinolates) என்ற பொருளானது, உடலுக்குள் சென்ற பின் பயோ ஆக்டிவ் காம்பௌன்ட்களாக மாற்றப்படுகின்றன. அவை பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடி அவற்றின் தீவிரத்தை குறையச் செய்கின்றன.

இதிலுள்ள பொட்டாசியமானது உடலுக்குள் இருக்கும் திரவங்களை சமநிலையில் வைத்து இதயம் சரிவர செயல்பட உதவுகிறது.

இத்தனை நற்பயன்கள் கொண்ட நாபா முட்டைக்கோஸை நாமும் உண்டு நற்பலன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com