‘ஐவி’ என்னும் வெஜிடபிளில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

கோவைக்காய்
Kundruhttps://www.indiamart.com

வி (Ivy) என்று ஆங்கிலத்திலும், குன்ட்று (Kundru) என ஹிந்தியிலும் அழைக்கப்படும் இந்தக் காயை உலகம் முழுவதும் பரவலாகப் பல நாடுகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர். இக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஐவியிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் உடலில் கேன்சர் கட்டிகளை உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சர் நோய்த் தாக்குதலிலிருந்து உடலைக் காக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்துக்கள் இணைந்து செயலாற்றி இதய ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றன.

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் இரைப்பை, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சீரான செரிமானத்துக்கு உதவுகின்றன. மேலும், கழிவுகள் முழுவதுமாக வெளியேறவும், அல்சர், மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் குணமாகவும் துணை புரிகின்றன. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடிய தியாமைன் (Thiamine) என்ற சத்து ஐவியில் அதிகம் உள்ளது. ஐவி, மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும், மரபணுக்கள் உண்டாக்கும் நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

ஐவியிலுள்ள இரும்புச் சத்தானது அனீமியா மற்றும் உடல் சோர்வை நீக்கி, உடல் இயக்கம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, C போன்றவை கண்களின் ஆரோக்கியத்தைக் காத்து பார்வைத் திறனை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
முழு திருப்தியுடன் வாழ எவையெல்லாம் அவசியம் தெரியுமா?
கோவைக்காய்

ஐவி ஆன்டி ஒபிஸிடி குணம் கொண்டுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த குணமானது, பிரி அடிப்போஸைட்கள் (Pre-adipocytes) கொழுப்பு செல்களாக மாற்றப்படுவதைத் தடுக்கிறது. மேலும் இது மெட்டபாலிக் ரேட்டை உயர்த்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், எடைக் குறைப்பிற்கும் உதவுகிறது.

குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவக்கூடிய ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் ஐவி தாவரத்தின் இலைகள், பச்சையாகவோ வேக வைத்தோ, உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிப் பெண்களும் உட்கொள்ள ஏற்ற காய் இது. அதிகளவு உப்பு உட்கொள்ளுவதால் சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கற்கள், ஐவி காயை பசலைக் கீரையுடன் சேர்த்து உண்ணும்போது நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இக்காயை உண்பது நலம்.

ஐவி காயை தமிழில் கோவைக்காய் என்று கூறுவர். அநேக நற்பலன்கள் கொண்ட ஐவியை நாமும் உண்போம்; உடல் நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com