பன்னீர் ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Panner Apple
Panner Applehttps://www.youtube.com
Published on

டல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்த பன்னீர் ஆப்பிள் பழம், ஆப்பிள் இனத்தைச் சார்ந்து இருப்பதால் இதனை பன்னீர் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள் என்றும், நீர் சத்து நிறைந்து இருப்பதால் வாட்டர் ஆப்பிள் என்றும், ஜாமூன் ஃப்ரூட் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை ஆப்பிள் போல் இருக்காது. இனிப்பும், புளிப்பும் கலந்து இருக்கும். இதன் வடிவம் கோயில் மணி போன்று இருக்கும். இந்தப் பழம் பார்ப்பதற்கு கண்ணாடி போன்ற தோற்றத்திலும், இளம் சிவப்பு மற்றும் ரோஸ் கலர் கலந்தும் இருக்கும்.

பன்னீர் ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி, ஏ, நியாசின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இந்தப் பழத்தின் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கவல்லது. இதில் நியாசின் சத்து இருப்பதால் உடலுக்கு நல்ல கொழுப்பை கொடுக்கிறது. இதில் டைப்பிரிக் ஃபைபர் இருப்பதால் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான அளவு பொட்டாசியத்தை பராமரிக்கிறது. இதனால் தசைகள் பலமடைவதோடு, தசைப் பிடிப்பு, தசை வலியையும் குறைக்கிறது.

இந்தப் பழம் மூட்டுவலி பிரச்னைகளைப் போக்கக்கூடியது. இந்த நீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்பு உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. இதில் சோடியம் மற்றும் கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளதால் பக்கவாதம், தசை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு, பெருந்தமனி தடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடல் பாதிப்புகளை குறைக்கும்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழம் என்பதால் நீர்கடுப்பை குறைக்கும். இதை ஜூஸ் செய்து குடித்தால் வயிற்று வலி, காலரா, உடல் அழற்சி போன்றவற்றை குணப்படுத்தும். செல் அழிவை தடுப்பதால் நம்மை இளமையாக வைக்க உதவுகிறது.

இதன் இலைகளில் ஆன்டி பைரட்டிக், ஆன்டி இன்ஃபர் மேட்டிக், பிராபர்டீஸ் அதிக அளவில் இருப்பதால் இதை நாட்டு வைத்தியத்தில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சின்னம்மை நோய் வந்தால் இதன் இலைகளை காய வைத்து பவுடர் ஆக்கி ஸ்டோர் பண்ணி வைத்து தினமும் உடலில் பூசி குளித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். இந்த இலைகள் கண்களில் வரும் கட்டிகள், வாத சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதன் அவசியமும்; வழிமுறைகளும்!
Panner Apple

இந்தப் பூக்களில் 'டீ' போட்டுக் குடித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். இந்தப் பூக்களை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் சரியாகி விடும். பன்னீர் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பயன்படுகிறது. விதையை வறுத்துப் பொடி செய்து சாப்பிட்டால் நீரிழிவுக்கு மிகவும் நல்லது.

இதன் மரப்பட்டைகளை எடுத்து அதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா, மார்பு சளி, தொண்டை கட்டு இவற்றை சரி செய்கிறது. இந்தப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

இது நம் நாட்டிலும் விளையும் பழம்தான். இதன் உற்பத்தியை அதிகரித்து இந்தப் பழத்தை நாம் தவறாமல் சாப்பிட்டு அனைத்து நன்மைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com