ஸ்கேலப்ட் பொட்டட்டோவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Do you know the health benefits of scalloped potatoes?
Do you know the health benefits of scalloped potatoes?https://www.taste.com.

ஸ்கேலப்ட் பொட்டட்டோ (Scalloped Potato) என்பது உருளைக் கிழங்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவாகும். வேக வைத்த உருளைக் கிழங்குகளை தோல் நீக்கி வட்ட வடிவ ஸ்லைஸ்களாக நறுக்கி ஒவ்வொரு ஸ்லைஸ் மீதும் க்ரீமி சாஸ், மிளகுத்தூள், உப்புத் தூள், பாப்ரிக்கா ஆகியவற்றை சேர்த்து, ஒரு ட்ரேயில் அடுக்கி மேல் பாகம் முழுவதையும் விருப்பமான சீஸ் கொண்டு மூடி ஓவனுள் வைத்து சமைத்து எடுப்பதாகும். இந்த உணவிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆரோக்கியமான தசைப் பராமரிப்பு மற்றும் முழு உடல் இயக்கத்திற்கு உதவக்கூடிய உயர் தரமான லீன் (lean) புரோட்டீன் கொண்டது இந்த டிஷ். இதிலுள்ள வைட்டமின் B12 நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயக்கவும், இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது; ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் செய்கின்றன. ஸ்கேலப்ஸ்ஸில் உள்ள மக்னீசியமானது தசை மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுவதோடு, எலும்புகள் ஆரோக்கியம் பெறவும் துணை நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
தூக்கத்தில் பெண்கள் பற்களைக் கடிப்பதன் காரணம் தெரியுமா?
Do you know the health benefits of scalloped potatoes?

ஸ்கேலப்ட் பொட்டட்டோ குறைந்த அளவு கலோரி கொண்டது. கலோரி அளவைக் கணக்கிட்டு உணவு உட்கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும். நூறு கிராம் ஸ்கேலப்ட் பொட்டட்டோ 88 கலோரி கொண்டுள்ளது.

இதிலுள்ள மற்ற சத்துக்கள்: கொழுப்பு 3.7 g,, கொலஸ்ட்ரால் 12 mg., சோடியம் 335 mg,, பொட்டாசியம் 378 mg,, கார்போஹைட்ரேட் 11 g,, டயடரி ஃபைபர் 1.9 g., புரோட்டீன் 2.9.g. இந்த டிஷ்ஷை அனைவரும் செய்து உடல் நலம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com