உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் 100 சதவிகிதம் தூய்மையாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. உணவுப் பொருளுடன் ஏதேனும் ஒன்று சேர்க்கும்போது மிகக் குறைந்த அளவு மாசு ஏற்படும். இயற்கை தேனை தவிர்த்து மற்ற தேன்கள் சுத்தமாக இருக்குமா என்பதும் சந்தேகமே!
உலகில் தூய்மையான உணவுப் பொருள் எது என்று கேட்டால் நம் நினைவுக்கு உடனடியாக பால்தான் வரக்கூடும். ஆனால், இது சரியான விடை கிடையாது. பாலில் கூட சில சமயம் மாசு, தூசுகள், கலப்படம் உள்ளிட்டவை நிகழ்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பசுக்களுக்கும் பாலின் தரம் வித்தியாசப்படும். நெய்தான் உலகின் மிகவும் தூய்மையான உணவுப் பொருளாக உள்ளது.
பழங்கால சாஸ்திரங்களில் கூட நெய் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பசு நெய்யை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். உணவுப் பொருள் மட்டுமின்றி, பூஜைகளுக்கும் இந்த நெய்தான் பயன்படுத்தப்படுகிறது.10 கிராம் நெய்யை யாக அக்னியில் ஊற்றினால் ஒரு டன் ஆக்ஸிஜன் கிடைக்கும் இதற்காகத்தான் நமது முன்னோர்கள் யாகத்தில் நெய்யை பயன்படுத்தினார்கள்.
விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் பசு நெய்தான் மிகவும் தூய்மையானதாக கருதப்படுகிறது. இதில் சிறிதளவு கூட கலப்படம் கிடையாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெய் என்ற பெயரில் கலப்படமான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடியும். அதை தூய்மையான உணவு என்று கூற முடியாது. ஆனால், வீட்டிலேயே பால் வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் முழுக்க முழுக்க தூய்மையானது என்று கூறலாம்.
நெய் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் நல்ல கொழுப்பு ஆகும். காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். நெய்யின் கொழுப்பு உடலால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. மேலும், இது தசைகள் மற்றும் மூளைக்கு ஆற்றலை வழங்குகிறது.
நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் ஆனது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் சரி செய்கிறது. மேலும், நெய்யுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.
நெய்யில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைக்க உதவுகிறது. எனவே, உங்கள் உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்ப்பது மாதவிடாய் வலியிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும் மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளை சரிசெய்யும்.
நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களை ஊக்குவிப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நிலையை மேம்படுத்துகிறது. இதனால் கவனம் சிதறடிக்கப்படாது.
எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டமளிக்கும் இயற்கையான லூப்ரிகண்டுகளில் ஒன்று நெய். இது மூட்டு வலியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது. இது கீல்வாதத்தைக் கையாளும் நபர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
காலை, மதியம், இரவு என் மூன்று வேளையும் உணவுடன் ஒரு ஸ்பூன் நெய் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய் சாப்பிட பயப்பட வேண்டாம். இது PCOD, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், அசிடிட்டி, எலும்பு பலவீனம், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் களைப்பு, சிடுசிடுப்பு, அசதியாக இருப்பவர்கள், Hp அளவு குறைந்தவர்கள் மதிய உணவுக்கு முன் வெல்லமும், நெய்யும் எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார் பிரபல பிட்னெஸ் ஆலோசகர் ரிஜிதா திவேகர்.