ஜப்பானியர்கள் 100 வயது கடக்க காரணம்... (Food secret) உணவில் உள்ள சூட்சுமம்!

Japanese food secret
Japanese food secret
Published on

ஜப்பானியர்கள் தான் உலகிலேயே அதிக வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே (Japanese food secret). அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேர் 100 வயதினை கடந்துள்ளார்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை தருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒருவர் 80 வயதை தொட்டாலே, அது மிகவும் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் இது போன்ற நீண்ட ஆயுளுடன் ஒருவர் இருப்பது பெரிய சாதனையாகவே இருக்கிறது. ஆனால், ஜப்பானில் முதியவர்கள் நீண்ட காலம் வசிப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஜிங் பிங்க்குடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதைப் பற்றி கலந்துரையாடியதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், சத்தமில்லாமல் பெரியதாக எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஜப்பான் நீண்ட ஆயுள் விஷயத்தில் சாதித்து வருகிறது.

இந்த விஷயத்தில் அறிவியல், சுகாதார மேம்பாடு மட்டுமல்ல , ஜப்பானியர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானியர்கள் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் நீண்ட காலம் பாரம்பரியமான கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதனால் மன அழுத்தம் இன்றி, மன அமைதியுடன் நிம்மதியாக அவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களின் உணவு முறை (Food secret) அவர்களின் ஆயுளை நீண்ட காலம் வரை கொண்டு செல்ல உதவிகரமாக உள்ளது. அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையானவர்களாக உள்ளனர். அதனால் தான் அவர்கள் இந்த நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

செஞ்சுரி அடித்தவர்களில் பெண்கள் முன்னிலை

ஜப்பானில் ஆண்களை விட பெண்களே அதிகம் காலம் வாழ்கிறார்கள். செஞ்சுரி அடுத்தவர்களில் பெண்களே 90% வரை உள்ளனர். ஆண்கள் வெறும் 10% அளவிலே பின்தங்கியுள்ளனர். ஜப்பானில் 100 வயதை நிறைவு செய்தவர்களில் 87,784 பெண்களும், 11,979 ஆண்களும் இருக்கின்றனர். நாட்டின் வயதான பெண்மணி 114 வயதான ஷிகெகோ ககாவா ஆவார். அதே நேரத்தில் வயதான ஆண் 111 வயதான கியோடாகா மிசுனோ ஆவார்.

நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?

ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் அவர்களின் ஆரோக்கியமான உணவு முறை தான் (Food secret). அவர்கள் தங்கள் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தினசரி உணவில் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரை இருப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன 20 ரகசியங்கள்... இவை தெரிந்தால் மருத்துவரையே மறந்துவிடலாம்!
Japanese food secret

அவர்களின் உணவில் எண்ணெய் மிகவும் குறைவாகவே சேர்க்கின்றனர். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுகின்றனர். உணவுப் பொருட்கள் உப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.

அதிக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் அவர்கள் முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். எந்த உணவாக இருந்தாலும் முழுமையாக வேக வைப்பது இல்லை. அவர்கள் உணவை மெதுவாகவும், சிறிய அளவிலும் சாப்பிடுகிறார்கள். இது செரிமான அமைப்பை சரியாக வைத்திருக்கிறது. இந்த உணவு முறையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், செரிமான நோய்கள் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பெரிய அளவில் நோய் வாய்ப்படுவதும் இல்லை.

இதையும் படியுங்கள்:
ஒரு துளி கிராம்பு எண்ணெய் போதும்! 9 நோய்களை விரட்டும்!
Japanese food secret

உடல் செயல்பாடு

ஜப்பானிய மக்கள் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை நடத்துகிறார்கள். தினசரி அவர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர். நடைபயிற்சி, யோகா, வீட்டு வேலைகள் ஆகியவற்றை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். சுறுசுறுப்பான ஜப்பானிய வாழ்க்கை முறை இதய நோய்கள் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதால் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com