ஹை-ஹீல்ஸ் காலணிகள் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் தெரியுமா?

hi-heel sandals
hi-heel sandals

திரைப்பட நடிகைகளும் விளம்பர மாடல்களும் சிறிய ஸ்டூல் மேல் ஏறி நடப்பது போல, ஹை-ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதைப் பார்த்து, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் விருப்பமாக ஹை-ஹீல்ஸ் காலணிகள் இருக்கின்றன. ஹீல்ஸ் அணிவது நாகரிகம் என்று இவர்கள் கருதுகிறார்கள். ஆனால், அது உடல் நலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கணுக்கால் சுளுக்கு: உடலின் மொத்த உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது. மனிதனின் குதிகால் ஒரே ஒரு எலும்பால் உருவாக்கப்பட்டிருக்கும். நாம் நிற்கும்போது, தரையில் குதிகாலை அழுத்தி நிற்கிறோம். அதுதான் நமது உடலின் மொத்த எடையைத் தாங்கி நிற்க உதவுகிறது. ஹை-ஹீல்ஸ் அணியும்போது அந்த எடையை கணுக்காலில் உள்ள எலும்புகளுக்கும் அனுப்புகிறது. இதனால் கணுக்கால்களில் சுளுக்கு ஏற்பட்டு, வலி உண்டாகிறது.

2. முதுகு வலி: ஹை-ஹீல்ஸ் அணியும்போது கால் விரல்களின் பேலன்ஸிற்காக உடலின் கீழ்ப்பகுதி முன்னோக்கித் தள்ளப்படும். அதேசமயம் உடலின் மேல் பகுதி பின்னோக்கி தள்ளப்படும். இந்த நிலையானது முதுகெலும்புக்கு தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதனால் முதுகு வலி வருகிறது.

3. கால் விரல்களில் பாதிப்பு (Claw Toes): ஹீல்ஸ் போடும்போது கால் விரல் நுனியால் நடக்க வேண்டும். அப்போது சிலருக்கு பேலன்ஸ் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. கால் விரல்களில் 21 சிறிய எலும்புகள் உள்ளன. அவை வளைந்து கொடுக்கும் தன்மையுடன், அதிக பலம் இல்லாதவை. ஹீல்ஸ் அணிவதால், கால் விரல்கள் ஒரு அசாதாரண நகம் போன்ற வடிவத்தில் வளைந்து விடுகின்றன. அதனால் நடக்கும்போதும் வலியையும், ஓடுவதை மிகுந்த கடினமான செயலாகவும் ஆக்குகிறது.

4. இடுப்பு வலி: தொடர்ந்து ஹீல்ஸ் அணிந்து நடப்பவர்களின் வித்தியாசமான நடையின் காரணமாக இடுப்பு வலி வரும் அபாயம் உள்ளது.

5. மூட்டு வலி: இயல்புக்கு மாறான நடையின் காரணமாக முழங்காலுக்கு தேவையில்லாத அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டு வலி வருகிறது. சிலருக்கு ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் என்னும் மூட்டுகளை சிதைக்கும் நோய் கூட ஹில்ஸ் அணிவதால் வரலாம். சிலருக்கு உடல் வலியுடன் கூடிய தலைவலியை உருவாக்கி விடும்.

இதையும் படியுங்கள்:
படுக்கையில் இருந்து எழும்போது தலை சுற்றுகிறதா? இதுதான் காரணம்!
hi-heel sandals

இதனால் மிக மிக அபூர்வமாக மட்டுமே ஹை-ஹீல்ஸ் அணிய வேண்டும். அதை கையோடு எடுத்துச் சென்று தேவைப்பட்ட சில நிமிடங்களுக்கு மட்டும் அணிந்து கொண்டு வேறு காலணிக்கு மாறிவிடலாம். அப்படி அணிந்தாலுமே, வீட்டிற்கு வந்த பின் கால்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சி அளித்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும். பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் ஹீல்ஸ் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும். இளம்பெண்கள் ஹீல்ஸ் அணிந்து நடந்த பின் கால்கள் வலித்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு பாதங்களை வைத்தால் சுகமாக இருக்கும். வலியும் நீங்கும்.

வெறும் நாகரிகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உடல் ஆரோக்கியத்தை பிரதானமாகக் கருத வேண்டும். பேஷன் என்ற பெயரில் உடல் நலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை பின்பற்றினால் அது ஆரோக்கியக் கேட்டில்தான் முடியும். நடிகைகளும், விளம்பர மாடல்களும் ஹை-ஹீல்ஸ் அணிந்தாலும், அவற்றை சிறிது நேரம் மட்டுமே அணிவார்கள். மேலும், முறையாக உடற்பயிற்சி செய்யும் வழக்கம் இருப்பதால் மேற்கண்ட உடல் பாதிப்பு ஏற்படாவண்ணம் தங்களைக் கவனித்துக் கொள்வார்கள். மற்றபடி செருப்பு அணியும்போது நம்முடைய குதிகாலுக்கு சப்போர்ட் செய்யுமாறு உள்ள இன்சால் வைத்து வாங்கி அணிய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com