இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

Health benefits of Turkey berry
Health benefits of Turkey berry
Published on

ல்லா இடங்களிலும் வளரக்கூடிய சிறிய வடிவில் உள்ள காய்தான் சுண்டைக்காய். ஆங்கிலத்தில் இது ‘டர்க்கி பெர்ரி’ என்று அழைக்கப்படுகிறது. கசப்பு சுவையுள்ள இந்தக் காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சுண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி: சுண்டைக்காயின் முக்கியமான நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது. நோஞ்சனாக இருக்கும் குழந்தைகளுக்கும் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வரும் நபர்களுக்கும் சுண்டக்காயை சமையல் செய்து கொடுத்து உண்ண வைத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அடிக்கடி உண்டு வருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

எலும்பு ஆரோக்கியம்: சுண்டைக்காயில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி. கால் வலி போன்ற பிரச்னைகளை சரி செய்யும். அடிக்கடி சுண்டைக்காய் உணவில் சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

ஊட்டச்சத்துக்கள்: இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அதனால் சிறந்த கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, பளபளப்பான சருமம் போன்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

செரிமான ஆரோக்கியம்: செரிமானத்திற்கு மிகவும் உகந்தது சுண்டைக்காய். இது இரைப்பை, குடல் பிரச்னைகளை தீர்க்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சச்சரவுகளுக்கு தீர்வாகும் சமாதானப் போக்கின் முக்கியத்துவம்!
Health benefits of Turkey berry

இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு: நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது இந்தக் காய். இதன் கசப்பு சுவை இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைக்கிறது. மேலும், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை நன்கு பராமரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்: இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது. மேலும், இது மன நிலையை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. மனச்சோர்வை போக்குகிறது. நல்ல நினைவாற்றலையும் தருகிறது.

வாய்ப்புண் தடுப்பு: சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண் பிரச்னை ஏற்படும். அவர்கள் சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் வாய்ப்புண் சரியாகும். சுண்டைக்காய் வாய்ப் புண்ணைத் தடுக்கிறது மற்றும் சொத்தை பல்லை உருவாவதைத் தடுக்கிறது. இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் சாப்பிட ஏற்றது. சுண்டைக்காயை பொறியலாக கூட்டாக அல்லது குழம்பு வைத்தும் உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com