கொல்லாஜன் என்றால் என்னவென்று தெரியுமா?

Do you know what collagen is?
Do you know what collagen is?https://www.siddhamaruthuvam.in

கொல்லாஜன் என்பது நம் உடலின் சருமம், தசைகள், தசை நார்கள் மற்றும் எலும்புகளில் காணப்படும் ஒரு முக்கியமான புரோட்டீன் ஆகும். சருமத்தின் எலாஸ்டிசிட்டி, எலும்புகளின் நெகிழ்வுத்தன்மை, மொத்த திசுக்களின் வடிவமைப்பு ஆகிய அனைத்தின் பராமரிப்பும் கொல்லாஜனின் பொறுப்பில் உள்ளது. நமக்கு வயது கூடும்போது கொல்லாஜன் உற்பத்தி குறைகிறது.

அதன் விளைவாக சருமத்தில் தொய்வு, சுருக்கம் ஆகியவையும், மூட்டுக்களில் இறுக்கமும் உண்டாகின்றன. கொல்லாஜன் உற்பத்தியைப் பெருக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை இனி பார்ப்போம்.

கொல்லாஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய வைட்டமின் C அடங்கிய ஆரஞ்சு பழங்களை அடிக்கடி உண்பது அவசியம்.

ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின் A மற்றும் பயோட்டின் அடங்கிய கேரட் ஜூஸ் குடிப்பது நலம் தரும். அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்ட மஞ்சள், சருமத்தில் ஏற்படும் தழும்பை குணமாக்கும்.

வைட்டமின் C மற்றும் லைகோபீன் அதிகம் கொண்ட தக்காளி ஜூஸ் குடிப்பது கொல்லாஜன் அளவை அதிகரிக்கும்; சருமத்தை அல்ட்ரா வயலெட் கதிர்களின் தாக்குதலிலிருந்து காக்கும்.

வைட்டமின் A அடங்கிய வாட்டர் மெலன் மற்றும் கிரேப் ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் உண்டாகும் பருக்கள் நீங்கும். வைட்டமின் A அதிகமுள்ள பசலைக் கீரை, அவகாடோ, மாம்பழம் மற்றும் லெட்டூஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வது நலம் தரும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் ஊதா கலர் தோசை சாப்பிட்டிருக்கீங்களா?
Do you know what collagen is?

வைட்டமின் E அதிகமுள்ள பீட்ரூட் மற்றும் பாதாம் கலந்த ஜூஸ் அருந்துவதால் அல்ட்ரா வயலெட் கதிர்களின் தாக்குதல் மூலம் சருமத்தில் ஏற்படும் வீக்கம் குறையும்.

ஆப்பிள் மற்றும் புதினா கலந்த ஜூஸ் குடிக்கும்போது பல நன்மைகள் கிடைக்கும். ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மற்றும் பெக்டின் கொண்ட ஆப்பிள் ஜீரண மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புதினா சரும துவாரங்களை சுத்தம் செய்யும்; சருமத்தை நீர்ச்சத்து நிறைந்ததாய் வைக்கும்; இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

ஆரஞ்சு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ் அருந்துவதால் சரும ஆரோக்கியம் பெறும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் அல்ட்ரா வயலெட் கதிர்களின் தாக்குதலிலிருந்து சருமத்தை காக்கும். இஞ்சி, சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

காலே, பசலை, புதினா இலைகள் மற்றும் சில பழ வகைத் துண்டுகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ்களையும் பயன்படுத்தி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com