குழந்தைகள் விரும்பி உண்ணும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு என்ன தெரியுமா?

காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்
காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்
Published on

நாம் கடைகளுக்கு, ஷாப்பிங் மால்களுக்குச் சென்றால் நம் கண்ணில் முதலில் படுவது சரம் சரமாய் தொங்கும் சிப்ஸ் நொறுக்குத் தீனி வகைகள்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளுக்கு அடிமை என்று கூட கூறலாம். இதில் நமக்கு என்ன வருத்தம் என்றால், ‘அந்தப் பாக்கெட்டுக்குள் 10 சிப்ஸ்தான் இருக்கும். மீதி அனைத்தும் காற்றுதான்’ என வருத்தப்பட்டுக் கொள்வோம். அந்த சிப்ஸ் பாக்கெட்டில் உள்ள காற்று, என்ன காற்று? அது எதற்காக அதில் அடைக்கப்படுகிறது என்பது பற்றி நாம் எப்போதாவது யோசித்து இருப்போமா? அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சரியாக பாதுகாக்கப்படாத அல்லது திறந்த கொள்கலன்களில் உள்ள உருளைக்கிழங்கு சீவல்கள் போன்ற எண்ணெயில் பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், நாளடைவில் கெட்டுப்போய் அதன் சுவை மற்றும் மணம் மாறிவிடக்கூடும். இதற்குக் காரணம், எண்ணெயால் பொரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதிவினை புரிந்து ஆக்சிஜனேற்றமடைகின்றன. இதற்கு ஆங்கிலத்தில் ரான்சிடிட்டி (Rancidity) என்று பெயர்.

இவ்வாறு நொறுக்குத் தீனிகள் கெட்டுப்போகாமல் இருக்க தயாரிப்பு நிறுவனங்கள், தீனிகள் அடைக்கப்பட்ட பொட்டலங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்புகின்றன. இதனால், பொட்டலத்தில் உள்ள தீனிகள் ஆக்சிஜனுடன் வினைபுரிவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம், உணவுப்பொருட்கள் நீண்ட நாட்களுக்குக் கெடாமல், சுவை மற்றும் மணம் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பால் கட்டிக்கொள்வதன் காரணமும் நிவாரணமும்!
காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்

பொதுவாக, எண்ணெய் மற்றும் கொழுப்பை உள்ளடக்கிய உணவுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடையாமல் தடுக்க, அவற்றுடன் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், காற்று உட்புகா உணவுப்பொட்டலங்கள் பயன்படுத்துவதன் மூலம், உணவுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடையும் வேகத்தைக் குறைக்க முடியும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி, இந்த உணவுப்பொருள் கெட்டுப்போகாமல் இருக்க அடைக்கப்படும் காற்று உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி தீராத பிரச்னைகளில் கொண்டு சென்று விடும். இதுபோன்ற பாக்கெட் தின்பண்டங்களை அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com