லைகோரைஸ் டீ என்றால் என்னவென்று தெரியுமா?

Do you know what Liquorice tea is?
Do you know what Liquorice tea is?https://vaya.in
Published on

லைகோரைஸ் (Liquorice) டீ என்பது, 'அதிமதுரம்' என்றொரு மூலிகை செடியின்  வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுவது. இந்த மூலிகையானது பலவித ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய மருந்துகளின் தயாரிப்பில் கூட்டுப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. லைகோரைஸ் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

லைகோரைஸ் டீ ஜீரண மண்டலத்திற்குள் உண்டாகும் பொதுவான கோளாறுகளை நீக்கக் கூடியது. அஜீரணம், வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குறைக்கும். மலச்சிக்கலையும் நீக்கும் திறனுடையது.

மூச்சு விடுதல் சம்பந்தமான சுவாசப் பாதையில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகும் இருமல், சளி ஆகியவற்றை குறைத்து சுலபமாக மூச்சு விட உதவி புரிகிறது.

லைகோரைஸ் டீயிலுள்ள க்ளைசிரைசின் என்ற கூட்டுப் பொருளானது உடலில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க வல்லது. இது அட்ரினல் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கார்டிசோல் (cortisol) அளவை சமநிலையில் வைக்கிறது. அதனால் மன அழுத்தம் குறைந்து உடல் அமைதி நிலை பெறும். அம்மாதிரியான சாந்தமான மன நிலையில் நரம்பு மண்டலங்களுக்கும் அமைதி கிடைக்கிறது.

இதிலுள்ள ஒரு கூட்டுப் பொருளானது ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை நீக்குவதிலும் வலியைக் குறைப்பதிலும் சிறந்து விளங்குகிறது. உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவிபுரிந்து, உடல் எடை கூடாமல் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
உள்ளங்காலில் எண்ணெய் வைத்து படுத்தால் இவ்வளவு நன்மைகளா?
Do you know what Liquorice tea is?

இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் குணங்களானது சரும அழற்சியினால் உண்டாகும் எக்சிமா என்ற நோயினால் வரும் அரிப்பைக் கட்டுப்படுத்தி சுகமளிக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு துணை புரிகிறது. இதன் ஆன்டிவைரல் குணமானது நோய்த்தொற்று ஏற்படுவதை தடுத்து, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கண்களின் பார்வைத் திறனில் குறைபாடிருந்தால் அவற்றையும் சரி செய்கிறது.

வேறு பல உடல் நலக் கோளாறுகளுக்காக ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்பு இதை உட்கொள்வது நலமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com