யாரெல்லாம் இளநீரை அதிகமாக அருந்தக்கூடாது தெரியுமா?

Who should not drink coconut water?
Who should not drink coconut water?
Published on

லவித ஊட்டச்சத்துகளைக் கொண்ட சுவையான இளநீர் அநேகமாக எல்லோருக்குமே பிடித்த பானம். ஆனால், இதை சிலர் அடிக்கடி அல்லது அதிகமாக அருந்தக் கூடாது. அவர்கள் யார்? என்ன காரணத்திற்காக அவர்கள் அடிக்கடி இளநீரை அருந்தக்கூடாது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இளநீரில் உள்ள சத்துகள் மற்றும் பயன்கள்: 100 மில்லி இளநீரில் கார்போஹைட்ரேடுகள், சிறிதளவு புரதம், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்தவர்கள், உட்கொள்ள ஏற்ற பானம் ஆகும். இது ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. 100 மில்லி இளநீர் குடிப்பது ஒரு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்குச் சமம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இளநீரை அனைவரும் அடிக்கடி அருந்தக் கூடாது.

யாரெல்லாம் இளநீரை அதிகமாக அருந்தக்கூடாது?

உயர் பொட்டாசியம் உள்ளவர்கள்: இளநீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் இன்றியமையாதது. ஆனாலும், அதிகப்படியான பொட்டாசியம் உட்கொள்ளல் ஹைப்பர் கேமியாவுக்கு வழிவகுக்கும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு தசை பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, இதய நோயாளிகள், இளநீரை அதிகமாக அருந்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உடலின் அதிகளவு புரதச்சத்து சிறுநீரகத்தைப் பாதிக்குமா?
Who should not drink coconut water?

செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள்: இளநீரை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அதற்குக் காரணம் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைகள். இது உணர்திறன் வாய்ந்த வயிறு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு பொருந்தாது. ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இவர்கள் அரிதாகவே இளநீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள்: இளநீரை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை சீர்குலைப்பு உண்டாகும். இந்த ஏற்றத்தாழ்வு பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிக்கும். சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, நீர் ஏற்றத்தை விட நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்: இதில் உள்ள சோடியம் உள்ளடக்கம் காரணமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்றது அல்ல. இதை அடிக்கடி அருந்தும்போது இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகும். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே இளநீரை அருந்த வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள்: கரும்புச்சாறு, மாம்பழச்சாறு போன்ற பிற சர்க்கரை பானங்களை விட இதில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் இளநீரில் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அவர்களது சர்க்கரை அளவு கூடும். அதேபோல, எடை குறைக்க நினைப்பவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளக்கூடாது.

இதையும் படியுங்கள்:
உடல் வியர்வையால் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
Who should not drink coconut water?

ஒவ்வாமை எதிர்வினைகள்: ஒவ்வாமை எதிர்வினை உள்ளவர்களுக்கு குறிப்பாக சரும எதிர்வினைகள் அல்லது இரைப்பை குடல் எதிர்வினைகள் உள்ளவர்களுக்கு இளநீர் ஒத்துக்கொள்ளாது. இதை அடிக்கடி குடிப்பது ஆபத்தை விளைவிக்கும். சரும நோய்கள் மற்றும் குடல் ரீதியான சிக்கல்கள் உண்டாகும். மிக மிக அரிதாகவே இவர்கள் இளநீரை அருந்த வேண்டும்.

ஹார்மோன் கோளாறு உள்ளவர்கள்: ஹார்மோன் கோளாறு உள்ளவர்கள் அதிக அளவில் இளநீரை உட்கொள்ளக்கூடாது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இதன் விளைவாக பல நோய்களை உண்டாக்கும். எனவே, இவர்கள் அடிக்கடி இளநீரை அருந்தக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com