இடுப்பை சுற்றி சேரும் கொழுப்பு ஆபத்தானது! ஏன் தெரியுமா?

Fat around the waist
Fat around the waist
Published on

உடல் பருமனால் வரும் புற்றுநோய் நோய் காரணங்களை கண்டறிய உடல் எடை எடையை காட்டும் BMI அளவை விட இடுப்பை சுற்றிய அளவை கணக்கில் எடுப்பது தான் சிறந்தது. காரணம் இடுப்பை சுற்றி சேரும் கொழுப்பு அளவீட்டை காட்டும் இடுப்பின் சுற்றளவு பருமன் 11 செ.மீ அதிகரித்தாலே அவர்களுக்கு 25 சதவீதம் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் சுவீடன் நாட்டு லூண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதே வேளையில் BMI (Body mass index) அதிகரிப்பதால் 19 சதவீதம் ஆபத்தே ஏற்படுகிறது என்கிறார்கள்.

காரணம் BMI என்பது உடல் மொத்த அளவின் மதிப்பீடு அது உடல் கொழுப்பின் பரவலை காண்பிக்காது. ஆனால் இடுப்பின் சுற்றளவு அளவீடு இடுப்பில் சேரும் கொழுப்பின் அளவை துல்லியமாக காட்டும் அளவீடு என்கிறார்கள். இப்படி இடுப்பில் சேரும் கொழுப்பே அனைத்து உடல் நலக்குறைவுகளுக்கும் காரணமாகிறது என்கிறார்கள்.

ஆண், பெண் இருவரிடமும் இடுப்பளவு அகன்றவர்களுக்கு கண் புரை எனும் காட்ராக்ட் அபாயம் அதிகம் என்கிறது ஆய்வு. இடுப்பு அளவு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு தான் இதயம் மற்றும் இரத்த அழுத்த குறைபாடு நோய்கள் வருவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதோடு இடுப்பு அளவு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அடிக்கடி வருங்காலத்தை பற்றிய பயம் வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உங்கள் உயரத்தையும், இடுப்பு சுற்றளவையும் அங்குலத்தில் அளந்து கொள்ளுங்கள், உங்கள் உயரத்தில் இருந்து இடுப்பு சுற்றளவைக் கழியுங்கள். வித்தியாசம் 38 அங்குலம் இருந்தால் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள், 36 அங்குலம் அல்லது அதற்குக் கீழே இருந்தால் நீங்கள் பருமனாக இருக்கிறீர்கள். இந்த எளிய வழிமுறையை சொன்னவர் பிரபல அமெரிக்க டாக்டர் நார்மன் மார்ஷல்.

ஆண்களின் இடுப்பு சுற்றளவு 37 அங்குலத்திற்கும் குறைவாக உள்ளதா! அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் வர 13 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். எந்த வயதிலும் உடல் பருமனாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையை ஆரோக்கியமான அளவுக்கு குறைத்தால், அவர்கள் பல லட்சக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

இதையும் படியுங்கள்:
நடைப் பயிற்சியின் போது இந்த தவறுகளை செய்தால்... அச்சச்சோ அவ்வளவுதான்!
Fat around the waist

தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பைப் சுற்றி சதை அதிகரிக்கும் என்கிறார்கள். குறிப்பாக தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இது ஏற்படும் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.இந்த பாதிப்பை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள் என்கிறார்கள்.

தவறான உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் மந்தமான செரிமான அமைப்பு வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். இதனால் உங்கள் இடுப்பு உண்மையில் இருப்பதை விட பெரியதாகத் தோன்றும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே இடுப்பில் சதை சேர்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதிக நார்ச்சத்து சாப்பிடுவது உங்கள் இடுப்பை மெலிதாக மாற்ற உதவும் அதிக நார்ச்சத்து சாப்பிடுவது உங்கள் உடலின் கலோரிகளை எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் மெலிதான இடுப்பைப் பெற பங்களிக்கும்.

உங்கள் இடுப்பை இயற்கையாகவே குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சேர்ப்பது முக்கியம். ஓட்ஸ், பீன்ஸ் மற்றும் ஆளிவிதை போன்ற உணவுகளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, உள்ளுறுப்புக் கொழுப்பைக் குறைக்கும். உணவில் நார்ச்சத்தை அதிகரிப்பது எப்படி? காலை உணவோடு அதிக நார்ச்சத்துள்ள முழு தானிய உணவுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

உங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்க்கவும். பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளுக்குப் பதிலாக கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகளை சிற்றுண்டியாக உண்ணுங்கள். உங்கள் உடல் நார்ச்சத்தை திறம்பட செயலாக்க உதவுவதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். இரவில் ஆரோக்கியமான தூக்கத்தை கடைப்பிடித்து வாருங்கள் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கர்ப்ப காலத்தில் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி அரிப்பு ஏற்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
Fat around the waist

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com