
நடைப்பயிற்சியில் போது சிலர் கீழே பார்த்துக் கொண்டே நடப்பார்கள். இது கழுத்தில் வீக்கத்தையும் மற்றும் கழுத்து வலியையும் ஏற்படுத்தும். நீங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது நேரே பார்த்துச் செல்லுங்கள். குனிந்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
நடைப் பயிற்சியை மேற்கொள்ளும் போது உங்கள் உடலுக்கு ஓய்வு தர மறக்காதீர்கள். உங்கள் உடம்புக்கு ஓய்வு கொடுக்கும் போது உங்களுக்கு இறுக்கம் நீங்குவதுடன் உங்கள் தசைகளும் நன்கு வலுப்படும். ஓய்வில்லாமல் நடப்பது சிரமத்தைக் தரும்.
நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது உங்கள் சாப்பாட்டை தவிர்த்தால் உங்களுக்குப் போதிய சக்தி கிடைக்காது. ஆகவே நீங்கள் சத்தான உணவை உட்கொள்வதில் கவனம் வையுங்கள்.
சிலருக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது சோர்வு ஏற்படலாம். உடலில் வலி ஏற்படலாம். உங்கள் உடல் மொழியை கூர்ந்து கவனித்து உடனடியாக அந்தப் பிரச்னைகளை சரி செய்த பிறகு நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். அதில் அலட்சியம் வேண்டாம்.
சிலர் நடைப்பயிற்சியின் போது மிகப் பெரியதாக அடிகளை வைத்து நடக்க முயற்சி செய்வார்கள். காலை இப்படி நீளமாக நீட்டி நடப்பதால் மூட்டுக்கள் தசைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். இது உங்கள் நடையில் சமச்சீரின்மையை உண்டாக்கி காயங்களை ஏற்படுத்தலாம். முட்டி இடுப்பு மற்றும் பின் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நீங்கள் நடைப்பயிற்சியின் போது சிறிது சிறிதாக அடி எடுத்து நடப்பது உங்களுக்கு எந்த வலியையும் உண்டாக்காது.
நடைப் பயிற்சியின் போது அதற்கு ஏற்றார் போல் சிறந்த ஷுக்களை அணிந்து பயிற்சி மேற் கொள்ளவும். கனமான ஷுக்களைவிட லேசாக குஷன் மாதிரியான ஷுக்களே சிறந்தது.
நடைப்பயிற்சி மேற்கொள்ள உங்கள் மூச்சு சீராக இருக்க வேண்டும். நன்றாக மூச்சை உள்ளே இழுத்து விடும் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டால் நடக்கும் போது மூச்சு வாங்குதல் தடுக்கப்படும்.
ஒரே இடத்தில் நடப்பதை தவிர்த்து வெவ்வேறு இடங்களைத் தேர்வு செய்து நடக்க உற்சாகம் ஏற்படும்.
நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது பேசிக் கொண்டோ அல்லது செல் ஃபோனை கையில் வைத்துக் கொண்டோ நடக்காதீர்கள்.
நீங்கள் நடக்கும் போது இரண்டு கைகளையும் இறுக்கமாக வைக்காதீர்கள். நடக்கும் போது இரண்டு கைகளும் இயற்கையாகவே ஆடிக்கொண்டு செல்வதே இயல்பாகும். அதை விறைப்பாக வைக்க வேண்டாம்.
மிகவும் இறுக்கமான உடைகள் வியர்வையை அதிகப்படுத்தும். உங்கள் உடம்புக்கு சௌகரியமான ஆடையை அணிந்து நடைப் பயிற்சி மேற்கொள்ளவும்.