உடலுக்கு உரமேற்றும் காளான் உணவின் மருத்துவப் பயன்கள்!

Medicinal benefits of mushroom food
Medicinal benefits of mushroom food
Published on

காளான் உணவு இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது ஆறாத புண்களை ஆற்றும் குணம் கொண்டது. மேலும், காளானில் வைட்டமின் ஏ சத்து அதிகம் இருப்பதால் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவி புரிகிறது.

காளான் உணவு எரிட்டினைன் எனும் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இரத்தம் சுத்தமாவதால் இதயம் பலம் பெறுவதுடன் நன்கு சீராக செயல்பட வைக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் உணவின் பங்கு அதிகம். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த பலனைத் தருகிறது. ‌மேலும், மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களை வர விடாமல் தடுக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சனேயர் காட்சி தரும் திருத்தலம்!
Medicinal benefits of mushroom food

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக காளான் செயல்படுகிறது. 100 கிராம் காளான் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உதவி புரிந்து குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளானை உணவில் சேர்த்துக் கொள்வதால் விரைவில் உடல் நலம் தேறும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், ஆசன வாய்ப் புண் போன்றவை குணமாகும்.

இதையும் படியுங்கள்:
நல்வாழ்வை அழிக்கும் பொறாமை எனும் நச்சுத் தீ!
Medicinal benefits of mushroom food

காளானை நாம் அன்றாடம் செய்யும் பொரியல், குருமா போன்ற உணவு வகைகள் எல்லாவற்றோடும் சேர்த்து சமைக்க ருசியோடு, சத்தும் சேரும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டது. அதனால் பாலூட்டும் தாய்மார்கள் காளான் உணவினை தவிர்ப்பது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com