சிலர் உணவு சாப்பிட்டு முடித்த கையோடு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அவ்வாறு குடிக்கும்போது உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
டீ மற்றும் காபியில் நிறைய Polyphenols என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. டீயில் Tannin என்று சொல்லக்கூடிய Polyphenols உள்ளது. இரும்புச்சத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, Heme iron மற்றும் Non heme iron என்பதாகும். சைவ உணவுகளான கீரை, முளைக்கட்டிய பயிறு போன்றவற்றில் இருந்து கிடைக்கக்கூடிய இரும்புச்சத்தைத்தான் Heme Iron என்று சொல்வார்கள். அசைவ உணவுகளான மட்டன், சிக்கன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தைத்தான் Non heme iron என்று சொல்கிறோம்.
டீயில் உள்ள Tannin தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை உடலில் ஊறிஞ்ச விடாமல் தடுக்கிறது. எனவே, கீரை, முளைக்கட்டிய பயிறு, பேரிச்சம்பழம் போன்றவற்றை இரும்புச்சத்துக்காக எடுத்துக்கொண்டு உடனே ஒரு டீயை குடித்தால், அதில் இருக்கும் Tannin 50 சதவீதம் வரை உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடலில் சேரவிடாமல் தடுப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் பிளாக் டீ இந்த வேலையை அதிகமாகவே செய்கிறது.
காபியில் டீ அளவு இல்லை என்றாலும், காபியில் இருக்கக்கூடிய Polyphenols 20 முதல் 30 சதவீதம் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சிக்கொள்வதைத் தடுக்கிறது. இரும்புச்சத்து உடலில் நார்மலாக இருந்தால், உங்களின் உடலில் ஹீமோகுளோபினுடைய அளவு 12 மேல் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படப் போவதில்லை.
இதுவே, உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. ஹீமோகுளோபினுடைய அளவு 10க்கும் கீழ் உள்ளது என்றால், அதிலும் சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்பவராக இருந்தால் இந்தப் பிரச்னை பாதிப்பை உண்டாக்கும். அசைவத்தில் உள்ள Heme Ironக்கு Tannin ஆல் பிரச்னையில்லை. ஆனால், சைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டுடன் இருந்தால், இரும்புச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது 2 மணி நேரத்திற்கு முன்பும், 2 மணி நேரத்திற்கு பின்பும் டீ, காபியை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது சிறந்தது. இதனால் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட்டு இரத்தசோகை நோய் குணமாகும்.