உடல் எடை குறைந்தால் முகம் சிவப்பாகுமா?

Weight gain and facial flushing
Weight gain and facial flushing
Published on

திகமாக உடல் எடை உள்ளவர்கள், எடையை குறைக்கும்போது முகம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல், சரும நிறத்திலும் மாற்றம் ஏற்படும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களை நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும், சூரிய ஒளி படாத சருமத்தின் நிறமும் முகம், கழுத்தில் உள்ள சருமத்தின் நிறத்திற்கும் நிறைய மாறுபாடுகள் இருக்கும். முகம் மற்றும் கழுத்து பொதுவாகவே உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு கருப்பாகவே இருக்கும்.

உடல் எடை அதிகமாக இருக்கும்போது நம் உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை சரியாக வேலை செய்யாது. இன்சுலின் சரியாக வேலை செய்யாத காரணத்தினால், நம் உடல் அதிகமாக இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கும். Insulin Like Growth Factor 1 அதனுடைய Receptor இரத்தத்தில் இருக்கும் அங்கே சென்று சேர்ந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உலோக சத்துக்களுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உண்டா?
Weight gain and facial flushing

இதுவே சருமம் தடிமனாக காரணமான Keratinocytesஐ அதிகாரித்து விடும். அதுமட்டுமில்லாமல், நம்முடைய சரும நிறத்திற்குக் காரணமான மெலானின் என்னும் பிக்மென்ட்டை அதிகமாக சுரக்க வைத்துவிடும். அதனால்தான் உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அக்குள், கழுத்து போன்ற இடங்களில் கருமை அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்கும்போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அருமையாக கட்டுக்குள் வரும். மாவுச்சத்தை எடுத்துக்கொள்வதை குறைத்து உடல் எடையைக் குறைக்கும்போது சிறப்பான மாற்றத்தை கண்கூடாகக் காணலாம்.

இதற்காக அதிகமாக அழகு சாதனப்பொருட்களான Face cream, toner போன்றவற்றை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு சரியான உணவுமுறையை கடைபிடியுங்கள். மாவுச் சத்துள்ள உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள், உடல் எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா?
Weight gain and facial flushing

இதையெல்லாம் தொடர்ந்து செய்து வந்தாலே Hyperpigmentation என்று சொல்லப்படும் சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம் அருமையாக மூன்று முதல் ஆறு மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவுமுறைகளையும், உடற்பயிற்சி முறைகளையும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com