பழங்கள் அனைத்துமே பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள இயற்கை தந்த கொடைகள் எனலாம். பழங்களை அப்படியே சாப்பிடுவதை நன்மை எனினும் நேரமின்மை காரணமாக அதிலிருந்து எடுக்கப்படும் ப்ரெஷ் ஜூஸ் என்றால் அனைவரும் விரும்பி அருந்துவதுண்டு. தற்போது அன்னாசிப்பழம் பரவலாகக் கிடைக்கும் நிலையில் அதன் சாறு பற்றிய நன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.
அன்னாசி பழச்சாறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலங்களைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், செரிமானத்திற்கு உதவுதல், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது, ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துதல், கண் ஆரோக்கியத்துக்கு தீர்வு என அன்னாசி பழச்சாறு ஐந்து சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இவை தவிர, இந்த பழச்சாறில் செரிமானத்திற்கு உதவும் ப்ரோமெலைன் என்ற முக்கியமான என்சைமுடன் பொட்டாசியம், பி குடும்ப வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோயெதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் பிரச்னைகள், வீக்கங்கள், புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை அருந்தி அந்த பாதிப்புகளைக் குறைக்கலாம்.
இந்தச் சாற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாகிறது. இப்பழச்சாறு இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த உறைதலைக் குறைக்கும். மேலும், ஹைப்பர் டென்ஷன், இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயங்களைக் குறைக்கிறது.
சூடான அன்னாசி பழச்சாறு புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்களை வெளியிடுவதாகவும் இது புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் பயனுள்ள சிகிச்சை என்றும் நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளை அகற்றும் திறன் இப்பழச்சாறுக்கு உள்ளதால் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கு நிவாரணமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பகிர்வுகள் கூறுகின்றன.
ஒரு கப் வெந்நீரில் 2 முதல் 3 நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து தினமும் குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது என்ற கருத்தும் உள்ளது. இருப்பினும் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் அவசியம் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சுடுநீர் ஒவ்வாமையினால் ஏற்படும் உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுகளையும் நீக்குகிறது. அன்னாசி பழச்சாற்றில் இருந்து பெறப்படும் மருந்து பாதிப்பு தரும் வீரியம்மிக்க செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கிறது என்கின்றனர்.
ஆனால், இப்பழச்சாற்றை அதிகம் உட்கொள்வதால் சிறுநீரகப் பிரச்னைகள், பற்கள் பாதிப்பு, நீரிழிவு பாதிப்பு, ஒவ்வாமை, இரத்தப்போக்கு, கர்ப்ப கால பாதிப்புகள் என சில பக்கவிளைவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. அன்னாசி பழத்தோலை நன்கு சீவி துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவி பயன்படுத்துவது பாதுகாப்பு தரும்.