உடல் எடையை அதிகரிப்பது... அரிசியா? கோதுமையா? என்னங்கடா, சரியா சொல்லுங்களேன்!

அரிசி vs கோதுமை
அரிசி vs கோதுமை
Published on

வெகு நாட்களாகவே இந்த சர்ச்சை நம்மில் இருக்கிறது. நிறைய பேரின் கணிப்பு அரிசி சாப்பிட்டால் எடை மிக அதிகமாகும் என்பதே.

ஆய்வின் படி, இரண்டிலும் கிட்டதட்ட சம அளவில்தான் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன்ஸ் மற்றும் கொழுப்பு சத்துக்கள் இருக்கின்றன. இரண்டிற்கும் அத்தனை வித்தியாசம் இல்லை.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது எல்லோரும் உண்ணுகிற உணவை மனதில் எண்ணி உண்கிறார்கள். ஆனால் உண்ணும் அளவைப் பற்றி சிந்தப்பதில்லை. இவர்களாகவே மனதில் நினைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார்கள். உண்மையில் எடையை குறைக்க வேண்டும் என்றால், அதற்கு முக்கியமான காரணங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உண்ண வேண்டும்.

முதலில் நாம் எந்த வேலையை செய்கிறோம், எத்தனை மணி நேரம் செய்கிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதற்கு தகுந்தாற் போல் உண்ண வேண்டும். உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் சிறிது குறைவாக சாப்பிட வேண்டும்.

சாப்பிட்ட பிறகு ஒரு இருபது நிமிடம் இங்கும் அங்குமாக நடக்க வேண்டும். அலைந்து திரியும் வேலையில் இருப்பவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவர்கள் எந்த அளவு எடுத்துக் கொண்டார்களோ, அவை அத்தனையும் மறுபடியும் ஓடி ஆடி வேலை செய்யும் போது வெளியேறி விடும்.

சாதமோ அல்லது சப்பாத்தியோ அல்லது பிரியாணியோ எது வேண்டுமானாலும் இருக்கட்டும், அளவோடு சாப்பிடுங்கள். சப்பாத்தி சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று எக்கசக்கமாக சாப்பிட்டால் எடை எப்படி குறையும்?

வட மாநிலங்களில் இருப்பவர்களில் முக்கால்வாசி பேர் சப்பாத்தியைத்தான் உண்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் எல்லா நபர்களும் ஒல்லியாக இருக்கிறார்களா? இல்லையே, அங்கேயும் சில பேர் மிகவும் பெருத்தவர்களாக இருக்கிறார்கள், காரணம் மூன்று வேளையும் சப்பாத்தியை சாப்பிட்டாலும் அதிகமான நெய்யை தடவி உண்கிறார்கள். ஆகவே சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற‌ கணிப்பு முற்றிலும் தவறு.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு உணவு போதுமா பாஸ்? - மோனோ டயட் ரகசியம்!
அரிசி vs கோதுமை

இரண்டாவதாக பகல் தூக்கம். நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டால், எதுவாக இருந்தாலும் சரி, மதிய வேளையில் தூக்கம் வந்து விடும். “உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா?” என்பதற்கு ஏற்றாற்போல் சில பேர் மதியம் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவார்கள். அதுவும் ஆழ்ந்த தூக்கம். நீங்கள் எதை சாப்பிட்டாலும், பகல் நேரத்தில் தூங்கினால் கண்டிப்பாக எடை குறையாது மாறாக மிக அதிகமாகும். மதிய வேளையில் சாப்பிட்ட பின் சிறிது நேரத்திற்கு ஓய்வு எடுப்பது மிக அவசியம். ஆனால் அரை மணி நேரத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக இரவு நேர வாழ்வியல் முறை - இரவு நேரத்தில் இரண்டு சப்பாத்தியோ அல்லது தோசையோ அல்லது இரண்டு அல்லது மூன்று இட்லியோ எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். நீங்கள் வெயில் காலமாக இருந்தால் ஒரு கப் மோர் சாதத்தை சாப்பிடலாம், குளிர் அல்லது மழைக் காலத்தில் ஒரு கப் சுடச்சுட அரிசி பருப்பு கிச்சடி அல்லது ஜவ்வரிசி கிச்சடியை உண்ணலாம். எதை வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் இரவு நேரத்தில் அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட்டால் நல்லது.

மிக முக்கியமான ஒன்று, இரவு நேரம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டு டிவி மொபைல் எதையோ பார்த்து விட்டு பிறகு தூங்கி விட வேண்டும், குறைந்த பட்சம் 6 மணி நேரம் தூக்கம் வேண்டும். இங்குதான் நிறைய பேர் தவறு செய்கிறார்கள். இரவு மிகவும் லேட்டாக தூங்கினால் நிச்சயமாக எடை அதிகமாகும். சில பேருக்கு night shift duty இருக்கும், அதை தவிர்க்க முடியாது. ஆனால் வீட்டில் இருக்கும் போது நேரத்திற்கு தூங்கலாமே;

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அரிசியைத்தான் அதிகமாக உண்டார்கள், அவர்கள் ஆரோக்கியமாக வாழலையா? ஆகவே எடை விஷயத்தில் சப்பாத்தி அல்லது சாதம் எதுவாக இருந்தாலும் அளவு தான் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே சரியான நேரத்தில் சரியான அளவில் உண்டு சரியான உறக்கத்தை மேற் கொண்டால் உடலின் எடையை கட்டுபடுத்தலாம்.

இதை தவிர உடல் எடை அவரவர்களின் மரபணுவை பொறுத்தும் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
பழங்கள் சாப்பிட பிடிக்குமா? சாப்பிடும்போது இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!
அரிசி vs கோதுமை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com