ஒரே ஒரு உணவு போதுமா பாஸ்? - மோனோ டயட் ரகசியம்!

Mono Diet
Mono Diet
Published on

உணவு கட்டுப்பாடு என்றாலே பலரும் பயந்து நடுங்குவது இயற்கை. "என்னது, டயட்டா? அப்போ எனக்குப் புடிச்ச சாப்பாடு எல்லாம் தூக்கிப் போடணுமா?" என்று புலம்புவது நாம் அறிந்ததே. ஆனால், இந்த மோனே டயட் (Mono Diet) கொஞ்சம் வித்தியாசமானது. "மோனோ" என்றால் "ஒன்று" என்று பொருள். அப்போ ஒரே ஒரு உணவு மட்டும் சாப்பிட்டு உடம்ப குறைக்க முடியுமான்னு யோசிக்கிறீங்களா? வாங்க, இந்த மொனோ டயட் மாயாஜாலத்தைப் பற்றி கொஞ்சம் அலசி ஆராய்வோம். இது உண்மையிலேயே practical-ஆ, இல்ல வெறும் பேச்சுக்கான்னு தெரிஞ்சுக்குவோம்.

மோனோ டயட் என்றால் என்ன?

மோனோ டயட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே ஒரு வகையான உணவை மட்டும் உட்கொள்ளும் உணவு முறை. உதாரணத்திற்கு, ஒரு நாள் முழுவதும் ஆப்பிள் மட்டுமே சாப்பிடுவது, அல்லது வாழைப்பழம் மட்டுமே சாப்பிடுவது போன்றவை மோனோ டயட் ஆகும். இது திடீர் உடல் எடை குறைப்பிற்கு சிலரால் பின்பற்றப்படுகிறது.

மோனோ டயட்டின் சாதக பாதகங்கள்:

மோனோ டயட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், இது மிகவும் எளிமையானது. சமைக்க தேவையில்லை, குழப்பம் இல்லை, ஒரே ஒரு உணவு போதும். "என்னடா இது, இவ்வளவு ஈஸியா?" என்று ஆச்சரியப்படுவீர்கள். மேலும், சில ஆய்வுகள் மோனோ டயட் செரிமானத்தை எளிதாக்கும் என்று கூறுகின்றன. ஒரு சில நாட்களுக்கு இதை பின்பற்றுவது, உடலை "detox" செய்ய உதவும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கோடைக் காலம் நெருங்கியாச்சு... வெப்பநிலையைச் சமாளிக்கணுமே!?
Mono Diet

ஆனால், இந்த டயட்டில் பல பாதகங்களும் உண்டு. ஒரே ஒரு உணவை மட்டும் நீண்ட காலம் சாப்பிடுவது சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஒரே உணவில் கிடைப்பது கடினம். சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பக்க விளைவுகள் வரலாம். மேலும், இது நீண்ட காலத்திற்கு நிலையான உடல் எடை குறைப்பிற்கு உதவாது. மோனோ டயட் ஒரு "shortcut" மாதிரிதான், நீண்ட தூரம் ஓட்ட பந்தயத்திற்கு இது சரிவராது.

இது Practical-ஆ?

மோனோ டயட் குறுகிய காலத்திற்கு சிலருக்கு பலன் அளிக்கலாம். உடனடியாக சில கிலோ எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சில நாட்களுக்கு இதை முயற்சி செய்யலாம். ஆனால், இது நீண்ட கால தீர்வாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான ஊட்டச்சத்து இல்லாமல், உடலை வருத்திக்கொண்டு எடை குறைப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மோனோ டயட்டை நீண்ட காலத்திற்கு பரிந்துரைப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
ஜூஸ் டயட் இருப்பது உண்மையில் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
Mono Diet

உண்மையில், "practical" என்று பார்த்தால், மோனோ டயட் ஒரு தற்காலிகமான தீர்வு மட்டுமே. ஆரோக்கியமான, நிலையான உடல் எடை குறைப்பிற்கு சமச்சீர் உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். "டயட்" என்ற பெயரில் உடலை வருத்தி, உங்களுக்குப் பிடித்த உணவுகளை வெறுத்து, வாழ்க்கையை கஷ்டப்படுத்திக் கொள்வது நல்லதல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com