பப்பாளி பழத்துடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான்!

Papaya Fruit.
Papaya Fruit.

பப்பாளி பழத்தில் ஒரு மனிதனுக்குத் தேவையான எல்லா விதமான ஆரோக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனால் இந்த பழத்தை சாப்பிடும்போது சில உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிட்டால் நமக்கு பல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே நீங்கள் பப்பாளி சாப்பிடும்போது எதுபோன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இது நம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை சிறப்பாக மாற்ற உதவுகிறது. மேலும் இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கப்படும். இருப்பினும் இதில் இருக்கும் ‘பாபெய்னில் லேடெக்ஸ்’ எனப்படும் என்சைம், ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பப்பாளியுடன் சில உணவுகளை சாப்பிடும்போது வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பச்சை பப்பாளியை பெண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

பப்பாளியில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால், இத்துடன் அதிக அளவு கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடும்போது அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். மேலும் பப்பாளியுடன் தயிர், பால் போன்ற உணவுகளை சாப்பிடும் போதும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை தனித்தனியாக உட்கொள்வது நல்லது. 

பப்பாளியில் உள்ள பாபெய்ன், அதிகம் புரதம் நிறைந்த உணவுகள் செரிப்பதில் பிரச்சினைகளை ஏற்படுகிறது. எனவே அதிக புரத சத்து நிறைந்த இறைச்சி சார்ந்த உணவுகளை பப்பாளியுடன் இணைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 

இதையும் படியுங்கள்:
உடல் பருமனை விரட்டும் பப்பாளி!
Papaya Fruit.

அதேபோல பப்பாளியுடன் சேர்த்து சில மருந்துகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அது நம் உடலுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக பிளேட்லெட் எதிர்ப்பு மருந்துகள் அல்லது ரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பப்பாளியில் உள்ள விட்டமின் K, மருந்துகளின் தன்மையை மாற்றி விளைவுகளை ஏற்படுத்தலாம். 

பப்பாளியை அதிகம் உட்கொண்டாலும் கருப்பை சுருக்கம், தோல் எரிச்சல், வயிற்றுக் கோளாறு, மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, சுவாசப் பிரச்சனைகள் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரியான அளவில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com