காபி குடிக்கும்போது தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

Don't eat these foods while drinking coffee!
Don't eat these foods while drinking coffee!
Published on

உலகெங்கிலும் உள்ள மிகவும் பிரபலமான பானங்களில் காஃபியும் ஒன்று. அதன் தனித்துவமான சுவை உற்சாகமூட்டும் தன்மை காரணமாக பலரும் இதை தினமும் விரும்பி குடிக்கின்றனர். ஆனால், காபி குடிக்கும்போது சில உணவுகளை சேர்த்துக்கொள்வது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. காபி குடிக்கும்போது, எதுபோன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவாகவே காபி என்பது ஒரு வலுவான பானம். இது உடலில் பல வேதிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இது உடலில் உள்ள இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களின் உறிஞ்சுதலை பாதிக்கிறது. அதேபோல, சில உணவுகளும் உடலில் உள்ள சத்துக்களின் உறிஞ்சிதலை பாதிக்கின்றன. இந்த இரண்டு காரணிகளும் ஒன்றாக சேரும்போது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

காபி குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

கோழிக்கறி, நட்ஸ், பீன்ஸ், இறைச்சி போன்ற உணவுகளில் ஜிங்க் அதிக அளவில் நிறைந்துள்ளது. காபி ஜின்கின் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. இதனால், உடலில் ஜிங்க் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 

பருப்பு வகைகள், பட்டாணி, சோயா பொருட்கள் போன்ற உணவுகளில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. காஃபியில் உள்ள ரசாயனங்கள் இரும்புச்சத்து உறிஞ்சிதலைக் குறைப்பதால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. 

காபி கால்சியம் சத்து உறிஞ்சதலையும் குறைப்பதால், பால், தயிர், பால் பொருட்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இதனால், எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். 

பீட்ரூட், பாகற்காய், கொத்தமல்லி போன்ற உணவுகளில் ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த அமிலம் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்குகிறது. இது சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. 

காபி, கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சேரும்போது, உடலில் கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும். இதனால், உடல் பருமன், இதய நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
முழங்கால் வலியை எளிதாகக் குறைக்கும் 10 உணவு வகைகள்!
Don't eat these foods while drinking coffee!

ஏன் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? 

காபி ஒரு காரத்தன்மை கொண்ட பானம். இது உடலில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. மேலே குறிப்பிட்ட உணவுகளில் உள்ள சத்துக்கள் இந்த அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டு, உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதில்லை. இதன் விளைவாக சத்து குறைபாடு ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகின்றன. 

எனவே, காபி ஒரு சுவையான, உற்சாகமூட்டும் பானமாக இருந்தாலும், மேலே குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அதே போல, ஒரு நாளைக்கு நீங்கள் அதிகமாக குடிக்கும் காஃபியின் அளவையும் குறைக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமச்சீர் உணவு முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com