தயிர் என்பது இந்தியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு முக்கியமான உணவு. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். ஆனால், எல்லா உணவுகளுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது. சில உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பதிவில் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தயிருடன் சேர்க்கக்கூடாது உணவுகள்:
மீன் மற்றும் தயிர் இரண்டிலும் புரோட்டின் நிறைந்துள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் சரும நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இறைச்செயலில் உள்ள புரோட்டின் தயிரில் உள்ள புரோட்டினுடன் சேர்ந்து, செரிமானத்தை மெதுவாக்கும். இதனால், வயிற்று உப்பசம், வாயு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பழங்கள் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், செரிமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு உண்டாகும். குறிப்பாக மாம்பழம், வாழைப்பழம் போன்ற வெப்பம் தரும் பழங்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.
வெங்காயத்தையும் தயிரையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், தோல் அலர்ஜி, சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் ஏற்படலாம். மேலும், எண்ணெய் உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் மெதுவாக நடந்து உடல் சோர்வு ஏற்படும்.
பால் மற்றும் தயிர் இரண்டுமே பால் பொருள்தான் என்றாலும், இதை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் வாயுப் பிரச்சனைகள் ஏற்படும்.
தயிருடன் மேலே குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்பட்டு வயிற்று வலி, அஜீரணம் போன்றவை ஏற்படலாம். குறிப்பாக, சில உணவுகளை சாப்பிடும்போது சரும அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. செரிமானம் பாதிக்கப்படுவதால் அந்த நாள் முழுவதும் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். எனவே, மேலே குறிப்பிட்ட உணவுகளுடன் தயிரை சேர்த்து ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.
மேற்கண்ட உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பதால் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால், எல்லா நபர்களுக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. எனவே, உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு எந்த புதிய உணவு முறையையும் பின்பற்றுவது நல்லது.