மஞ்சள் காமாலை (Jaundice) நோயினால் மரணம் கூட ஏற்படுமா?

Jaundice symptoms and remedies
Jaundice symptoms and remedies
Published on

சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் காலமானார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மஞ்சள் காமாலை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததே இதற்கு காரணமாகும். மஞ்சள் காமாலை நோய் ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு குணப்படுத்துவது? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

மஞ்சள் காமாலை (Jaundice) எதனால் ஏற்படுகிறது

நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடைந்து வெளியேறும் போது Bilirubin என்னும் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிறத்திலான பிக்மெண்டை உருவாக்கும். இதை ரத்தத்தில் இருந்து வடிகட்டி கழிவுகள் வெளியாக வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. இந்த Bilirubin அதிகமாக சுரக்க ஆரம்பித்தாலோ அல்லது கல்லீரல் அதன் வேலையை சரிவர செய்யவில்லை என்றாலோ இந்த நிறமி நம் ரத்தத்தில் கலந்துவிடும். இதுவே, மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதற்கு காரணம்.

மஞ்சள் காமாலை (Jaundice) அறிகுறிகள்

மஞ்சள் காமாலை வந்தால் நம் தோல் மற்றும் கண்களில் உள்ள வெண்மையான பகுதி மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். ஜுரம், வயிற்று வலி, உடல் எடைக் குறைதல், அடர்நிற சிறுநீர் ஆகியவற்றை அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.

மஞ்சள் காமாலை (Jaundice) ஏற்படுவதற்கான காரணங்கள்

1. கல்லீரலில் ஏற்படும் வீக்கம் காரணமாக மஞ்சள் காமாலை நோய் வரும். இதை கல்லீரல் அழற்சி (Hepatitis) என்று கூறுவார்கள். மஞ்சள் காமாலை வைரஸ், மது அருந்துவது, Auto immune disorder நோய் போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம்.

2. 8 முதல் 10 வருடம் தொடர்ந்து மது குடிப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதனால் மஞ்சள் காமாலை நோய் வரும்.

3. Auto immune disease உள்ளவர்களுக்கு மரபு வழியாக cirrhosis நோய் ஏற்படும்.

4. கல்லீரலில் Bile duct என்ற மெல்லிய ட்யூப் போன்ற அமைப்பு இருக்கிறது. இதுவே Bile என்னும் திரவத்தை கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து சிறுக்குடலுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ட்யூப் போன்ற அமைப்பை பித்தப்பைக் கற்கள் அடைத்துக் கொண்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.

5. Acetaminophen, Penicillin, Steroid போன்ற மருந்துகளை பயன்படுத்துவதும் கல்லீரலை பாதிக்கக்கூடும்.

மஞ்சள் காமாலையை (Jaundice) எப்படி குணப்படுத்துவது

மஞ்சள் காமாலை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். மருத்துவர் உங்கள் ரத்தத்தை பரிசோதித்து அதில் Bilirubin அளவு அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை இருப்பதை உறுதி செய்வார். Hepatitis ஆக இருந்தால் கல்லீரல் குணமாகும் போது மஞ்சள் காமாலை நோய் போய்விடும். இதற்கு தடுப்பூசி இருக்கிறது. Hepatitis B உடலுறவின் மூலமாக பரவும் காரணத்தால் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ள வேண்டும். இதுவே, Bile ductல் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகும். 

இதையும் படியுங்கள்:
உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: நன்மைகள், சிக்கல்கள் மற்றும் சவால்கள்!
Jaundice symptoms and remedies

மஞ்சள் காமாலையை (Jaundice) எவ்வாறு தடுக்கலாம்

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கத்தை நிறுத்துவது சிறந்தது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் குறிப்பிட்ட அளவை மீறி அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பழச்சாறு, இளநீர், மோர் போன்ற திரவங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட லேசான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு குணமான பிறகு மது அருந்துதல், வறுத்த உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் மீண்டும் மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com