
மனித உடலில் செரிமானத்தில் தொடங்கி, தூக்கம், சந்தோஷம், பயம், கவலை, சோர்வு, வளர்ச்சிதை மாற்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு, பல முக்கிய ஹார்மோன்களான ஆக்ஸிடோசின்,மெலடோனின் டோபமைன், அட்ரினலின், இன்சுலின் போன்ற பல ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கப்படுகின்றன. அதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
இதில் முக்கியமாக நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது மூளையிலிருந்து சுரக்கப்படும் மகிழ்ச்சி ஹார்மோனே டோபமைன் ஹார்மோன் ஆகும். இப்பதிவில் டோபமைன் டீடாக்ஸ் பற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.
டோபமைன் ஹார்மோன்:
நான் சந்தோசமான பரவச நிலையில் இருக்கும்பொழுது, நம் மூளையானது அதற்குத் தகுந்தார் போல், ரசாயன ஹார்மோனை சுரக்கிறது. அந்த ஹார்மோன் தான் டோபமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும். அளவுக்கு அதிகமாக டோபமைன் ஹார்மோன்கள் சுரக்கும் பொழுது, ஒரு சில நாட்களிலேயே அதன் சுரத்தல் தன்மையானது குறைகிறது. இதனால் நம் உடலுக்கு பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படி ஏற்படுத்தாமல் இருக்க நாம் டோபமைன் டீடாக்ஸ் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
டோபமைன் டிடாக்ஸ் என்றால் என்ன? (What is a dopamine detox?)
ஆங்கிலத்தில் டீடாக்ஸ் என்ற வார்த்தைக்கு தமிழில், கழிவுகளை சுத்தம் செய்வது, நீக்குவது, சுத்திகரிப்பு, தெளிவுபடுத்துதல் போன்ற பல அர்த்தங்களை வழங்குகிறது. அதேபோல் இந்த டோபமைன் டீடாக்ஸ் என்பது நம் மூளையில் சுரக்கும் மகிழ்ச்சி ஹார்மோனை சமநிலைப்படுத்துவதே அல்லது தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம் மற்றும் அர்த்தம் ஆகும். இப்போது அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
டோபமைன் டிடாக்ஸ் செய்வது எப்படி? (How to do a dopamine detox?)
செல்போனில் அதிக நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக ஷார்ட்ஸ், ரீல்ஸ்,வீடியோ கேம் போன்றவைகள். அதேபோல் டிவியையும் அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
உடம்புக்கு கெடுதல் விளைவிக்கும் ஜங்க் உணவுகளை முற்றிலும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கிடைக்கும் பொழுது புத்தகம் வாசித்தல், டைரி எழுதுதல், கதை, கவிதை, கட்டுரை எழுதலாம் அல்லது கைவினைப் பொருட்களை செய்யவும் கற்றுக் கொள்ளவும் முயற்சிக்கலாம்.
தினமும் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் கண்ணை மூடி தியானம் செய்ய வேண்டும்.
அதிகம் சத்தம் இல்லாமல், அடிக்கடி இசை கேட்பதை நிறுத்த வேண்டும். அதனை விட்டுவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார வேண்டும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காராாமல்,நிற்காமல் இயற்கை காற்றை சுவாசித்துக் கொண்டு வெளியே ஒரு குட்டி வாக்கிங் செல்லலாம்.
தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். செறிவூட்டப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
டோபமைன் டிடாக்ஸின் நன்மைகள் (Benefits of dopamine detox):
இதன் மூலம் டோபமைன் ஹார்மோனின் சுரத்தலானது சமநிலை அடைகிறது. அதாவது தெளிவடைகிறது. இதனால் நமக்குள்ளே ஓர் இனம் புரியாத பரவச நிலை ஏற்படுகிறது. டோபமைன் டீடாக்ஸ் மூலம் உடலானது தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது.
தெளிவான சிந்தனை,நோக்கம், உடல் ஆரோக்கியம் மேம்படுதல், சீரான தூக்கம், இலக்குகளை தேர்ந்தெடுத்து முடித்துக் காட்டுவது, நட்புடன் பழகுதல், துரிதமாக செயல்படுதல், பயமில்லாமல் இருப்பது, கோபம் இல்லாமல் நிதானமாக பொறுமையுடன் செயல்படுவது போன்று மனதளவிலும், உடலளவிலும் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
டோபமைன் டிடாக்ஸ் பற்றிய கட்டுக்கதைகள் (Myths about dopamine detox):
டோபமைன் ஹார்மோனை குறைக்கிறது.
டீட்டாக்ஸ் செய்தவுடன் ஒரே நாளில் சந்தோஷத்தை கொடுக்கும்.
இது ஒரு முழுமையான மருத்துவ சிகிச்சையாகும்.
மூளையிலிருந்து டோபமைன் ஹார்மோனை நீக்குகிறது.
போன்ற பல்வேறு கட்டு கதைகள் இன்றும் கூறப்பட்டது வருகிறது. ஆனால் டோபமைன் டீடாக்ஸ் என்பது மூளையின் செயல்பாடுகளை தெளிவுபடுத்தி, ஒழுங்குப்படுத்தி சம நிலையில் செயல்பட வைப்பதே இதன் நோக்கமாகும்.